கொஞ்சலுடன் ஒரு கெஞ்சல்.. காதலை சொல்லும்.. ஒரு சான்ஸ் கொடு பொண்ணே ஆல்பம் சாங்!
சென்னை : மேகா ஆகாஷ், சாந்தனு, கலையரசன் போன்றோரின் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியானது ஒரு சான்ஸ் கொடு பொண்ணே ஆல்பம் சாங்.
Recommended Video
சாந்தனு மற்றும் மேகா ஆகாஷ் காதலுக்கு இடையே இருவரையும் இணைக்க காதல் தூது போகும் கலையரசன். பல வித சுவாரஸ்யங்கள் அடங்கிய ஸ்க்ரீன் பிளே மிகவும் ரசிக்க வைக்கிறது.
முற்றிலும் புதுமையாக காதலை சொல்லி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாடலுக்குள் ஸ்க்ரீன் பிளே செய்து அழாகாக கதை சொல்லிய விதம் நிறைவை தருகிறது.

அதிகம் கவரப்பட்டது
தனது படங்களின் மூலம் தனக்கான ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரின் கடைசி படமான எனை நோக்கி பாயும் தோட்டா பல வருடங்களுக்குப்பின் பல சிக்கல்களை தாண்டி வெளியானது. இதை தொடர்ந்து இவரது ட்ரீம் ப்ராஜெக்டான துருவ நட்சத்திரம் விக்ரம் நடிப்பில் கிளாஸியாக தயாராகி கொண்டிருக்கிறது. இதன் இரண்டு மாஸான டீஸர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டது. இந்நிலையில் இவரது விண்ணைத்தாண்டி வருவாயாவின் சீக்குவலாக கார்த்திக் டயல் செய்த எண் என்ற சார்ட் பிலிம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக வலம் வந்தது.

காதல் சண்டை
இதை தொடர்ந்து தற்போது அவர் இயக்கியுள்ள ஒரு சான்ஸ் கொடு பொண்ணே ஆல்பம் சாங் தற்போது வெளியாகி இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இளைஞர்களின் நாடித்துடிப்பை நன்றாக அறிந்த இவர் இந்த பாடலை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். இந்த பாடலில் மேகா ஆகாஷ், சாந்தனு பாக்யராஜ், மற்றும் கலையரசன் போன்றோர் சிறப்பாக நடித்துள்ளனர். இதில் மேகா ஆகாஷ் மற்றும் சாந்தனு காதலர்களாகவும், கலையரசன் இவர்களின் நண்பராகவும் நடித்துள்ளனர். பல போராட்டங்களை கடந்து கொஞ்சம் கொஞ்சமாக திரைதுறையில் வளர்ந்து வரும் நடிகராக சாந்தனு சில படங்களில் நடித்துகொண்டு இருக்க அதனால் மற்ற நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பது பிடிக்காத தனது காதலி மேகா ஆகாஷ் சாந்தனுவிடம் கோபித்துக் கொண்டு அவரை பிளாக் செய்துவிடுகிறார்.

லோக்கல் பாயாக
இந்த சண்டையில் சந்தனு, மேகா ஆகாஷிடம் பேச முயற்சிக்கிறார் அவர் பேச மறுக்கவே இவர்கள் இருவரையும் வீடியோகால் மூலம் பேசியும் நடனமாடியும் சமாதானப்படுத்துவார் கலையரசன். அட்டகாசமான பாடல் வரிகளும் நடனமும் ஒருசேர அமைந்திருக்கும் இந்த பாடலில் சாந்தனு மிகப் பிரமாதமாக நடனமாடி இருக்கிறார்.

லோக்கல் லுங்கி
மேகா ஆகாஷ் எப்போதும் போல தனது குயூடான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஆர்ப்பரித்திருக்கிறார். கலையரசன் இருவரின் நண்பனாக லுங்கியுடன் லோக்கலாக நடனமாடி இருவரையும் இணைத்து வைப்பார். பாடலின் இறுதியில் மேகா ஆகாஷ் தனது பிளாக் லிஸ்டில் உள்ள சாந்தனுவை சிரித்த முகத்துடன் நீக்குவார்.

மிகப்பெரிய பலம்
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு இந்த பாடலுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது அனைத்து காட்சிகளையும் மிகப் பிரமாதமாக படம் பிடித்துள்ளார். இந்த பாடலை பாடகரும் இசையமைப்பாளருமான கார்த்திக் இசையமைத்துள்ளார், கார்த்திக்குடன் இணைந்து கானா குணா இந்த பாடலை பாடியுள்ளார். பாடலாசிரியர் கார்க்கி இந்த பாடலை எழுதியுள்ளார். சதீஷ் இந்த பாடலுக்கு சிறப்பாக நடன தொகுப்பை அமைத்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் தனக்கே உரித்தான ஸ்டைலில் இந்த பாடலை இயக்கியுள்ளார். இந்த பாடலை பல்வேறு தரப்பினரும் பார்த்தும் ரசித்தும் பகிர்ந்தும் வருகின்றனர். நிறைய கிரேயடிவ் சிந்தனைகளுடன் பல புது சாதனைகள் செய்யும் கௌதமை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











