கௌதம் மேனனின் அடுத்த படைப்பு .. ஒரு சான்ஸ் கொடு பாடலின் டீசர் வெளியானது!

சென்னை : கௌதம் வாசுதேவ் மேனன் அடுத்து வீடியோவின் டீசரை இன்று வெளியிட்டு உள்ளார்.

Recommended Video

Karthik dial seitha en review | Gautham Menon | AR Rahman | STR |Trisha

கடந்த சில மாதங்களாக பெரிதும் பேசு பொருளாக இருந்தது கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் தான்.

இந்தக் குறும்படம் பல்வேறு சர்ச்சைகளையும், பல்வேறு கேலி கிண்டல்களையும் தொடர்ந்து சந்தித்துக் கொண்டு சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தின் சூடே இன்னும் அணையாத நிலையில் இப்போது கௌதம் வாசுதேவ் மேனன் தனது அடுத்து வீடியோவின் டீசரை இன்று வெளியிட்டு உள்ளார். ஆனால் இப்போது வரவிருப்பவை குறும்படம் அல்ல பாடல்.

 சிம்பு த்ரிஷா

சிம்பு த்ரிஷா

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற ஒரு மாபெரும் வெற்றி பெற்ற காதல் படத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு அந்தப் படம் பலராலும் ரசிக்கப்படும் பாராட்டப்படும் இன்றளவும் பலரது விரும்பத்தக்க படங்களில் இதுவும் ஒன்றாக இருந்து கொண்டு வருகிறது. இந்த படத்தில் சிம்பு கார்த்திக் ஆகவும், திரிஷா ஜெஸ்ஸி ஆகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் சேர்ந்து கணேஷ் காமெடியில் கலக்கி இருப்பார். இப்படத்திற்கு பின் இவர் அனைவராலும் விடிவி கணேஷ் என அறியப்பட்டது.

 பார்ட் 2

பார்ட் 2

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் ரசிகர்கள் அனைவரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனை, இதன் பாகம் 2 எப்பொழுது வரும் என கேள்விகள் கேட்டு வந்தனர். இவ்வாறு பலராலும் விண்ணைத்தாண்டி வருவாயா பாகம் 2 வரவேண்டும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில்.. இந்த ஊரடங்கு சமயத்தில் திடீரென கௌதம் வாசுதேவ் மேனன் "கார்த்திக் டயல் செய்த எண்" என்ற குறும்படத்தின் டீசரை வெளியிட்டார். அதில் ஜெஸ்ஸி கார்த்திக் உடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார். அத்துடன் அந்த டீசர் முடிவடைந்த நிலையில் அனைவரும் இது கண்டிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பாகம்-2 தான் என அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.

 புருஷனை தாண்டி வருவாயா

புருஷனை தாண்டி வருவாயா

இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புடன் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் வெளியாகியது. வெளியான சில மணி நேரங்களிலேயே அதனைப் பற்றி மக்கள் பெரிதாக பேசத் தொடங்கிவிட்டனர். இந்த குறும்படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த வேளையில் நெட்டிசன்கள் இந்த படத்தை மீம்ஸ்களின் மூலம் இது விண்ணைத்தாண்டி வருவாயா இல்லடா புருசனை தாண்டி வருவாயா என கலாய்த்தும்,நக்கலடித்தும் வந்தனர்.

 சொல்ல வந்தது வேறு

சொல்ல வந்தது வேறு

தனது நீண்ட நாள் காதலியை திருமணம் ஆன பின்பும் பார்க்க விரும்புவதாக சொல்லும் ஒரு இளைஞனின் ஏக்கத்தை சொல்ல வந்த கௌதம் மேனனை, புருஷனை தாண்டி வருவாயா என்று பலராலும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. அனைவரும் விண்ணைத்தாண்டி வருவாயா போன்று இந்த குறும்படம் வரும் என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இந்த படம் புருஷனை தாண்டி வருவாயா, நீங்க எனக்கு இன்னொரு பேபி என்று பலராலும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டது. அதே சமயம் சிலர் இந்த படத்தை ரசித்தும் புகழ்ந்தும் வந்தனர்.

 அடுத்த படைப்பு

அடுத்த படைப்பு

இவ்வாறு பல சர்ச்சைகளுக்கு, கேலி கிண்டல்களுக்கு பஞ்சமில்லாமல் இந்த குறும்படம் இன்றும் ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டிருக்கும் வேளையில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அதையெல்லாம் பொருட்படுத்தாது தனது அடுத்த வீடியோவிற்கு ஆயத்தமானார். ஒரு சிறந்த படைப்பாளிக்கு அழகு கேள்விகளையும், கிண்டல்களையும் புறம்தள்ளி வைத்துவிட்டு தனது அடுத்த படைப்பிற்கு தயாராவது ஆகும் அந்த பார்முலாவை கௌதம் வாசுதேவ் மேனன் பின்பற்றி இருக்கிறார். இந்த முறை குறும்படம் அல்ல பாடல்.

ஒரு சான்ஸ் கொடு

ஒரு சான்ஸ் கொடு

ஒரு சான்ஸ் கொடு பாடலின் வீடியோ டீசர் வெளியானது. அதில் சாந்தனு பாக்யராஜ், மேகா ஆகாஷ், கலையரசன் போன்றோர் நடித்திருந்தனர். சாந்தனு ஒரு லவ்வர் பாயாக தனது க்யூட் எக்ஸ்பிரஷன்களால் ஒரு சான்ஸ் கொடு பொண்ணு என்ற பாடலுக்கு அழகான நடனமாடி இருக்கிறார். கலையரசன் லோக்கல் பாயாக மொட்டை கையில் லுங்கியுடன் நடனமாடுவார். மேகா ஆகாஷ் கூந்தல் பறக்கும் அழகுடன் சுற்றிலும் மெழுகுவர்த்தி பொருத்தப்பட்டிருந்த அறையில் நைட்டியில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் வண்ணம் இந்த டீசர் காட்சிகள் இருக்கிறது . மேலும் சதீஷ் கிருஷ்ணா நடனமாடும் ஒரு காட்சியும் அதில் இடம்பெற்றிருந்தது.

டீசர் ரிலீஸ்

டீசர் ரிலீஸ்

இந்த பாடலை கார்த்திக் இசையமைக்க, பாடலாசிரியர் கார்க்கி இதற்கு காதல் வரிகளை எழுதி இருக்கிறார். இந்த பாடலை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். 24 விநாடிகள் கொண்ட இந்த டீசர் தற்போது வெளியாகியுள்ளது. கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தை தொடர்ந்து இந்த பாடல் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று டீசர் மட்டுமே வெளியான நிலையில் இந்த பாடலின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X