பப்பி படத்திற்காக பாடகராக மாறிய கவுதம் வாசுதேவ் மேனன்

Recommended Video

கல்யாணத்துக்கு முன்னாடி கசமுசா தப்பில்ல !! | SAMYUKTHA HEDGE | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை: யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பப்பி திரைப்படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு அழகான மெலடி பாடலை பாடியிருக்கிறார். இவர் ஏற்கனவே நீதானே என் பொன் வசந்தம் படத்திலும் இளையராஜாவின் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெற்றி படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கனேஷ் தயாரிப்பில் உருவாகி உள்ள பப்பி படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு பாடல் பாடியுள்ளார்.

Gautham Vasudev Menon sang a song in Puppy Movie

கவுதம் இயக்குனர் பாடகர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர் இதற்கு முன்பே நீதானே என் பொன் வசந்தம் படத்தில் ஒரு பாடலை இசைஞானி இளையராஜா இசையில் பாடியிருந்தார். இந்த பாடலுக்கு வரிகள் தந்துள்ளார் ஆர்.ஜே.விஜய்.

ஆர்.ஜே.விஜய் சில படங்களில் பாடல்கள் எழுதி உள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர்.லோக்கல் படத்தில் டக்குனு டக்குனு மற்றும் கலக்கலு மிஸ்டர்.லோக்கலு என்ற பாடலையும் எழுதி இருக்கிறார்.

தற்போது பப்பி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு நொடியினில் நாம் நிலை தவறியதால் இரு நாள் வாழ்வே என்ற அழகான மெலடியான பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். பப்பி படத்தில் வருண், நாயகி சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வருண் இந்த படத்தில் கதநாயகனாக அறிமுகமாகிறார். இவர் தலைவா, போகன், வனமகன், எல்.கே.ஜி, கோமாளி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். அதோடு இவர் ஐசரி.கணேஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடல்ட் காமெடி ஜார்னரில் உருவாகி வருகிறது.

இந்த படத்தை இயக்கியவரின் பெயர் முரட்டு சிங்கிள் என படத்தின் முன்னோட்டத்தில் போடப்பட்டிருந்தது .அதற்கு மேல் இயக்குநரின் உண்மையான பெயர் பற்றிய தகவல்களை படக்குழு வெளியிடவில்லை.

இந்த படம் அக்டோபர் 11 திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வெளியாவதையொட்டி படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் பாடிய பாடலின் மேக்கிங் சோனி யூடியுப் பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X