சாதிய இயக்குநர்களை இப்படி மொக்கை பண்ணிட்டாரே கெளதம் மேனன்.. அந்தமாதிரி படமெல்லாம் வேண்டாமாம்!
சென்னை: பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்ட சில இயக்குநர்கள் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், கெளதம் மேனனின் சமீபத்திய பேச்சு அவர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது. சினிமா ஒரு ஆர்ட் ஃபார்ம் என்றும் அதில் வெறும் கமர்ஷியல் குப்பைகளை மட்டும் கொட்டாமல் மக்களுக்கு பகுத்தறிவையும் எளிய மக்களின் வேதனைகளையும் எடுத்துச் சொல்லும் படங்களையும் சில இயக்குநர்கள் இயக்கி வெற்றியடைந்து வருகின்றனர்.
எளிய மக்களின் வலியையும் வேதனையையும் காட்டி காசு பார்த்து அவர்கள் மட்டும் காரில் போகின்றனர் என்கிற விமர்சனங்கள் கிளம்பினாலும் அந்த மக்கள் குறித்த வாழ்க்கை வரலாறையும் அவர்கள் கடந்து வந்த கரடு முரடான பாதைகளையும் சினிமாவாக மாற்றுவது அடுத்து வரும் தலைமுறையினர் அவர்களை அப்படி பார்க்கக் கூடாது என்பதற்காகவும் அப்படி நடத்தக் கூடாது என்பதற்காகவும் பிறப்பால் அனைவரும் சமம் என்கிற கருத்தை வலியுறுத்தவும் படமெடுத்து வருகின்றனர்.

ஒரு சில இயக்குநர்கள் காதல் படங்களை எடுப்பதில் வல்லவர்கள், ஒரு சிலர் காமெடி படங்களையும் ஒரு சிலர் கருத்துள்ள படங்களையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கெளதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் சாதிய ரீதியிலான படங்களை எடுப்பதில் தனக்கு விருப்பமில்லை என்றும் மக்கள் அதனை வரவேற்பது கிடையாது என்றும் பேசியுள்ளார்.
சாதிய படங்கள் வேண்டாம்: சில இயக்குநர்கள் இருக்காங்க. நான் அவர்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை. சாதியத்தையும் பிரிவினை வாதத்தையும் வைத்து அவர்கள் படமெடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களால் அதனை நிகழ்கால சினிமாவாக எடுக்க முடியாது. பல சிக்கல்கள் வரும். அதனால், அவர்கள் 80களிலும் 90களிலும் இப்படி நசுக்கினார்கள், பிதுக்கினார்கள் என்பது போல படமெடுத்து வருகின்றனர். ஆனால், மக்கள் அதை பெரும்பாலும் விரும்புவதில்லை. தியேட்டருக்கு வந்து என்டர்டெயின் ஆக மட்டுமே மக்கள் படம் பார்க்க வருகின்றனர் என இயக்குநர் கெளதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
மேனன் பெயர் குறித்து விளக்கம்: கெளதம் வாசுதேவ் மேனன் என்கிற பெயரைத்தான் தனக்கு வைத்தனர் என்றும் தன்னுடைய தந்தையின் பெயர் பிரபா கிருஷ்ணன் தான் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். பள்ளி, கல்லூரி என அனைத்து இடத்திலும் கெளதம் வாசுதேவ் மேனன் என்று தான் உள்ளது. அதையேதான் படங்களில் பயன்படுத்தி வருகிறேன் என்றும் சாதிய அடிப்படையிலோ அல்லது குடும்ப பரம்பரை பெயரையோ முன்னிறுத்தவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.
டொமினிக் படம் தேறுச்சா?: மம்முட்டி கம்பெனி தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் 2 நாட்களில் வெறும் 2.95 கோடி ரூபாய் வசூலை மட்டுமே எடுத்துள்ளதாக கூறுகின்றனர். மம்முட்டி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிரமயுகம் திரைப்படம் 80 கோடி வரை வசூல் செய்த நிலையில், டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்யுமா? என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











