சிம்புவும், தயாரிப்பாளரும் ஒன்றாக சேர்ந்தால்தான் படம் வரும்.. கௌதம் மேனன் சொன்ன நச் பதில்!

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜோஷ்வா: இமை போல் காக்க திரைப்படம் வரும் 1ந் தேதி வெளியாக உள்ளது. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வருண், ராஹி, கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் ரிலீஸ் குறித்து பேசினார்.

தமிழ் சினிமாவில் மாஸ் அண்ட் கிளாசான இயக்குநர் என்றால் அது கௌதம் வாசுதேவ் மேனன் தான். மாதவன், கமல்ஹாசன், அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார். இயக்குநராக அதிரடி காட்டிவந்த இயக்குநர் கௌதம் மேனன், 2020 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் முழுநேர நடிகராக மாறிப்போனார். துருவநட்சத்திரம் திரைப்படத்தால் வந்த கடனால் திக்கு முக்காடி போன கௌதம் மேனன், கடனை அடைக்க தொடர்ந்து படங்களில் நடித்து வருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Gautham vasudev menon speech joshua imai pol kaakha press meet

ஜோஸ்வா இமை போல் காக்க: கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் தான் ஜோஸ்வா இமை போல் காக்க, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அந்த ஆண்டே முடிந்தது. இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வருண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராக்கே என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், யோகிபாபு, டிடி, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கௌதம் மேனனின் நச் பதில்: இத்திரைப்படம் மார்ச் 1ந் தேதி வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய கௌதம் மேனன், துருவ நட்சத்திரம் படம் எப்போது வரும் என்ற கேள்விக்கு வரும் என்று பதில் அளித்தார். இதையடுத்து, த்ரிஷா பற்றி அதிமுக பிரமுகர் தவறாக பேசியது குறித்து பேசிய கெளதம் மேனன், யார் பேசினாலும் தவறுதான். பெண்களை பற்றி தவறாக பேசினாலே தவறுதான் என்றார். விஜய் சாரின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் செய்வேன். என்றார். மேலும்,வெந்து தணிந்தது காடு படத்தின் பாகம் 2 எப்போது வரும் என்ற கேள்விக்கு "எப்போது சிம்புவும், தயாரிப்பாளரும் ஒன்றாக இணைகிறீர்களோ அப்போதுதான் அந்த படம் வரும் என்று நச்சுனு பதில் அளித்தார்..

ஐசரி கணேஷூக்கு நன்றி: முன்னதாக நிகழ்வில் பேசிய கெளதம் மேனன், நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே செய்வதற்கு முழு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. வருணை ராஜா வீட்டுக்கன்று குட்டி என்று சொன்னார்கள். அந்த இடம் அவ்வளவு எளிதானது இல்லை. எனக்கு வருணை முதன்முறையாக பார்க்கும் போது எனக்கு அப்படிதான் இருந்தது. நான் எதிர்மறையாக யோசிக்கும் நபர் கிடையாது. ஆகையால் எனக்கு அந்த எண்ணம் அப்படியே சென்று விட்டது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X