என்னிடம் காதல் கதைதான் உள்ளது நடிக்க தயாரா..? சிவகார்த்திகேயனிடம் ஓப்பனாக கெட்ட கௌதம் மேனன்!

சென்னை : திகட்டாத காதல் திரைப்படங்களை இயக்கி வரும் கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் மற்றும் ஜோஷ்வா இமை போல் காக்க என இரண்டு திரைப்படங்கள் விரைவில் வெளியாக காத்துக்கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் ஏகப்பட்ட அந்தொலஜி திரைப்படங்களை இயக்கி வரும் கௌதம் சமீபத்தில் இயக்கிய புத்தம் புது காலை திரைப்படத்தில் "அவளும் நானும் - அவரும் நானும் " என்ற பகுதி அனைவரின் மனதையும் மயிலிறகால் வருடிச் சென்றது.

இதைத்தொடர்ந்து பிரபல முன்னணி நடிகருடன் இவர் இணைய உள்ளதாக வெளியான தகவலின் படி இப்பொழுது சிவகார்த்திகேயனுடன் அடுத்த படத்தில் இணைய கொக்கி போட்டு உள்ளார்.

பிரச்சினைகளை சந்தித்து

பிரச்சினைகளை சந்தித்து

தமிழில் முன்னணி நடிகர்களாக உள்ள சூர்யா, விக்ரம், சிம்பு, கமல்ஹாசன், அஜித் என அனைவரையும் வைத்து காதல் மற்றும் ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களை இன்று வரை கொண்டாட வைத்து வரும் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபகாலமாக திரைப்படங்களை வெளியிடுவதில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.

வெளியாக தயாராக உள்ளது

வெளியாக தயாராக உள்ளது

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் கதை முதலில் சூர்யாவிடம் கூறப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் அந்த திரைப்படத்தில் இப்பொழுது விக்ரம் நடித்து வெளியாக தயாராக உள்ளது.

டிமிக்கி கொடுத்து

டிமிக்கி கொடுத்து

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டு மாஸான ட்ரைலர்களை வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் கௌதம் மேனன் இப்பொழுது இளம் நடிகர் வருண் நடிக்கும் ஜோஸ்வா இமைபோல் காக்க என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். துருவ நட்சத்திரம், ஜோஸ்வா இமைபோல் காக்கா என இரண்டு திரைப்படங்களும் வெளியாக தயாராக உள்ள நிலையில், அதில் துருவ நட்சத்திரம் பல வருடங்களாக வெளியாகாமல் டிமிக்கி கொடுத்து வருகிறது.

குவாரண்டைனில் அழகான காதல்

குவாரண்டைனில் அழகான காதல்

இந்த இரண்டு திரைப்படங்களும் தான் வெளிவரவில்லை, ப்ளீஸ் சிம்புவுடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பாகம் இரண்டையாவது இயக்குங்கள் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்த நிலையில், குவாரண்டைனில் அழகான காதல் குறும்படம் ஒன்றை இயக்கி அதை விண்ணைத்தாண்டி வருவாயா பாகம்-2 என சொல்லி அதற்கு "கார்த்திக் டயல் செய்த எண்" என்ற தலைப்பையும் இட்டார்.

சூசகமாக ட்விட்டர் பக்கத்தின்

சூசகமாக ட்விட்டர் பக்கத்தின்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கௌதம் மேனன் அடுத்த திரைப்படத்தில் முன்னணி நடிகர் ஒருவருடன் இணைய உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது அதை சூசகமாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

காதலால் பாதிக்கப்பட்டு

காதலால் பாதிக்கப்பட்டு

நான் காதலால் பாதிக்கப்பட்டு வரும் ஒருவன், அதனால் என்னுடைய திரைப்படங்கள் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டதாக தான் இருக்கும் அதற்காக என் மீது பழி போட வேண்டாம், அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சிவகார்த்திகேயன்?

பாசிட்டிவான பதில்

பாசிட்டிவான பதில்

இவ்வாறு கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த காதல் திரைப்படத்தை இயக்க சிவகார்த்திகேயனிடம் ஓப்பனாக கேட்டுள்ளது கோலிவுட் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஒருபுறம் ஆழ்த்தி இருந்தாலும், சிவகார்த்திகேயனிடம் இருந்து இன்னும் எந்த ஒரு பதிலும் இல்லை. பாசிட்டிவான பதில் வருமென தெரிகிறது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X