Joshua: Imai Pol Kaakha Box office: ஜோஸ்வா இமை போல் காக்க படத்தின் முதல் நாள் வசூல் விவரம்!
சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் நேற்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம் ஜோஸ்வா : இமை போல் காக்க. இதில், பிக் பாஸ்நிகழ்ச்சி மூலம் பிரபலமான வருண் , ராஹேய் திவ்யதர்ஷினி, விசித்ரா, கிருஷ்ணா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கார்த்திக் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜோஸ்வா படத்தின் முதல் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் தான் ஜோஸ்வா இமை போல் காக்க, இந்த படத்தின் படப்பிடிப்பு அதே ஆண்டே முடிவடைந்த நிலையில், சில பிரச்சனைகளால் படம் நேற்று தியேட்டரில் வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், கெளதம் மேனன் படங்களில் வருவதுபோல் நாயகனான ஜோஸ்வா மற்றும் நாயகியான குந்தவையும் சந்தத்து காதலிக்கிறார்கள். ஹீரோவான ஜோஸ்வா பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையை சேர்ந்தவன் என்கிற உண்மையை குந்தவைவுக்கு தெரியவர இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

படத்தின் கதை: சர்வதேச அளவில் பிரபல வழக்கறிஞராக இருக்கும் கதாநாயகியான குந்தவை போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதான மாஃபியா கும்பலின் தலைவனின் வழக்கை வாதாட இருக்கிறார். இதனால் அவருடைய கூட்டாளிகள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். இறுதியாக குந்தவையை கொல்வதற்கு பெரும் தொகை பேசப்படுகிறது. குந்தவையை இந்த கொலைகார கும்பல்களிடம் இருந்து காப்பாற்ற பார்டிகார்டாக களமிறங்கும் ஜோஷ்வா, அவரை கொலைகாரர்களிடமிருந்து எப்படி காப்பாற்றினார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ஒரே சண்டை தான்: முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். ஜேம்ஸ் பாண்ட் படத்தைப்போல் நாயகனுக்கு உடை கொடுத்து சண்டைக் காட்சிகளை சிறப்பாக அமைத்திருந்தாலும் திரும்ப திரும்ப சண்டைகாட்சியே படத்தில் வந்து கொண்டுஇருந்ததால், படம் பார்ப்பவர்களுக்கு அலுப்பு ஏற்பட்டது. மேலும், கார்த்திக்கின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என படம் பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
முதல் நாள் வசூல்: நீண்ட நாட்கள் எதிர்பார்ப்புக்கு பின் நேற்று தியேட்டரில் வெளியான ஜோஸ்வா : இமை போல் காக்க திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 0.09 கோடியாக உள்ளது. கௌதம் மேனனின் படம் என்பதால், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் படம் எதிர்பார்த்தபடி இல்லை. துருவநட்சத்திரம் படத்தால் அவர் சந்தித்த நெருக்கடி இந்த படத்தில் அப்பட்டமாக தெரிகிறது. மேலும்,நாயகன் வருணுக்கு இன்னும் நடிப்பு பயிற்சி கொடுத்து இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











