கோர விபத்தில் சிக்கிய ஷாருக்கான் பட நடிகை காயத்ரி ஜோஷி..இரண்டு உயிரிழப்புகள்..முழு விவரம் உள்ளே
இத்தாலி: Gayathri Joshi Met Accident (காயத்ரி ஜோஷிக்கு கார் விபத்து) ஷாருக்கானுக்கு ஜோடியாக ஸ்வேட்ஸ் படத்தில் நடித்த காயத்ரி ஜோஷி தன்னுடைய கணவருடன் கார் விபத்தில் சிக்கினார்.
நாக்பூரை பூர்வீகமாக கொண்ட காயத்ரி ஜோஷி 2000ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியாவில் வென்றார். பிறகு மிஸ் இண்டர்நேர்ஷனல் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டார். இதன் மூலம் வெகு சீக்கிரமாகவே பிரபலமடைந்த அவர் மாடலிங் செய்வதையும், விளம்பரங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரத்தில் டாப்: அதன்படி பாம்பே டையிங், பாண்ட்ஸ், பிலிப்ஸ், கோத்ரேஜ், சன் சில்க்ஸ், எல்ஜி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றினார். அந்த விளம்பரங்கள் ஹிட்டடிக்க மேலும் பிரபலமானார் காயத்ரி ஜோஷி. அதன் மூலம் பாலிவுட்டின் கவனத்தையும் அதிகமாகவே ஈர்த்தார். இதன் காரணமாக அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சினிமாவில் அறிமுகம்: அதன்படி ஸ்வேட்ஸ் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அஷுதோஷ் கௌரிகர் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. மேலும் காயத்ரி ஜோஷிக்கும் பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக பலரும் கூறினார்கள்.
திருமணம்: ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2005ஆம் ஆண்டு அவர் தொழிலதிபர் விகாஸ் ஓபராயை திருமணம் செய்துகொண்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. ஏனெனில் பாலிவுட்டில் யாரேனும் ஒரே படத்தில் புகழடைந்தால் அவர்கள் சில வருடங்களுக்கு திருமணம் பற்றி யோசிக்கமாட்டார்கள். ஆனால் இவரோ ஒரே படத்தோடு பாலிவுட்டுக்கு முழுக்கு போட்டார். விகாஸுக்கும் காயத்ரிக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
கார் விபத்து: இந்நிலையில் இத்தாலியில் இவர்கள் இருவரும் சென்றபோது கோரமான கார் விபத்தில் சிக்கினர். அதாவது இத்தாலி நாட்டின் சார்டினியாவில் இருவரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது லம்போர்கினி மற்றும் ஃபெராரி போன்ற உயர் ரக கார்கள் ஒரே நேரத்தில் கேம்பர் வேனை முந்தி செல்ல முற்பட்டபோது அந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விபத்தின்போது ஃபெராரியில் ஏற்பட்ட தீ விபத்தின் விளைவாக மெலிசா க்ராட்லி, மார்கஸ் க்ராட்லி என்ற சுவிட்சர்லாந்தை சேர்ந்த வயதான தம்பதி உயிரிழந்திருக்கின்றனர். இதற்கிடையே நானும் விகாஸும் இத்தாலியில் இருக்கிறோம். இங்கு ஒரு கடுமையான விபத்தை சந்தித்தோம். கடவுளுடைய அருளினால் நாங்கள் இருவரும் நலமாக இருக்கிறோம்" என ஊடகம் ஒன்றுக்கு கூறியிருக்கிறார் காயத்ரி.


Click it and Unblock the Notifications