மாமி செய்ற வேலையா இது?: காயத்ரியால் நெட்டிசன்கள் அதிர்ச்சி
Recommended Video

சென்னை: காயத்ரி ரகுராம் சிக்கன் குழம்பு செய்துள்ளதை ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் என்ன சொன்னாலும் கலாய்க்கிறார்கள். அதே சமயம் அவரை பாராட்டவும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் காயத்ரி இன்று போட்டுள்ள ட்வீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காயு ஸ்பெஷல்
சிக்கன் குழம்பு மற்றும் பெப்பர் சிக்கன் ஃபிரை செய்த காயத்ரி ரகுராம் அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் போட்டு காயு ஸ்பெஷல் என்று தெரிவித்துள்ளார்.
சமையல்
காயத்ரியின் ட்வீட்டை பார்த்த ஒருவர் யாருக்காக இதை எல்லாம் சமைத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு காயத்ரியோ நண்பர்களுக்காக என்று பதில் அளித்துள்ளார்.
அசைவம்
அசைவம் சமைக்க யாரிடம் இருந்து கற்றுக் கொண்டீர்கள் என்று ரசிகர் ஒருவர் காயத்ரியிடம் கேட்க, அவரோ என் அக்கா என்று பதில் கமெண்ட் போட்டுள்ளார்.
கோழிக்கறி
மாமி சிக்கன் குழம்பு, பெப்பர் ஃபிரை எல்லாம் செய்கிறாரே என்று சிலர் கமெண்ட் போட்டுள்ளனர். முன்னதாக காயத்ரி மீன் சமைத்து புகைப்படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











