twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய காயத்ரி ரகுராம்.. ஆனால், கடைசியில் ஒரு போடு போட்டாரு பாருங்க!

    |

    சென்னை: நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்த காயத்ரி ரகுராம் உதயநிதி ஸ்டாலின் நல்லா நடிச்சிருக்காரு, படம் நல்லா இருக்கு என பாராட்டியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

    Recommended Video

    கோபப்பட்ட Gayathri Raghuram | என்னை கேள்வி கேட்காதீர்கள் | Filmibeat Tamil

    சமீபத்தில் அவரது பதவியை பாஜக மேலிடம் பறித்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் படத்தை பாராட்டி இருக்கிறாரே காயத்ரி ரகுராம் என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.

    கட்சி வேறு வேறாக இருந்தாலும், சினிமா நடிகர்கள் என்கிற முறையில் இந்த படத்தை பாராட்டுகிறேன் என்றும் சேஃப் கார்டு போட்டுக் கொண்டார் காயத்ரி ரகுராம்.

    மகளை பெரிய நடிகையாக்க வேண்டும்... தானே களத்தில் குதிக்கும் பிரபல நடிகர்! மகளை பெரிய நடிகையாக்க வேண்டும்... தானே களத்தில் குதிக்கும் பிரபல நடிகர்!

    உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி

    உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி

    காமெடி படங்களை ஒதுக்கிவிட்டு கருத்துள்ள படங்களில் நடிக்கும் முடிவில் களமிறங்கி உள்ளார் உதயநிதி ஸ்டாலின். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஆர்ட்டிக்கள் 15 எனும் அருமையான படத்தை ரீமேக் செய்து நடித்துள்ளார். உதயநிதிக்கு போலீஸ் உடை எப்படி செட்டாகும் என ட்ரோல் செய்தவர்கள், இந்த படத்தை பார்த்துவிட்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    டானுக்கு வழிவிட்டு

    டானுக்கு வழிவிட்டு

    கடந்த வாரம் வெளியான டான் திரைப்படத்தை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாதபடி தனது நெஞ்சுக்கு நீதி படத்தை சிறிய திரையரங்குகளிலும் குறைவான காட்சிகளுமாகவே ரிலீஸ் செய்துள்ளாராம் உதயநிதி ஸ்டாலின் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாள் வசூலாக ஒரு கோடி ரூபாய் வரை நெஞ்சுக்கு நீதி பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

    திமுகவினர் அலப்பறை

    திமுகவினர் அலப்பறை

    தியேட்டர்களில் பிரம்மாண்ட கட் அவுட்கள் வைப்பது, ஒரு ஷோ முழுவதையும் ஒரே ஆளாக புக் செய்வது, தியேட்டருக்கு வருபவர்களுக்கு இனிப்புகளை வழங்குவது என திமுகவினர் நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகி உள்ள திரையரங்குகளில் முடிந்த வரை அலப்பறை செய்து வருகின்றனர். சிலர், அதன் காரணமாக சில பின் விளைவுகளையும் சந்தித்து வருகின்றனர்.

    பாசிட்டிவ் விமர்சனங்கள்

    பாசிட்டிவ் விமர்சனங்கள்

    ஹவுஸ்ஃபுல் காட்சிகளோடு மிகப்பெரிய வசூலை நெஞ்சுக்கு நீதி படம் ஈட்டவில்லை என்றாலும், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி இருப்பதே படத்திற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் கிடைத்துள்ள வெற்றியாக பார்க்கப்படுகிறது. கமர்ஷியல் படமாக இல்லாமல் கன்டென்ட் படமாக கொடுத்துள்ள நிலையில், பல பிரபலங்களும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அருண்ராஜா காமராஜை பாராட்டி வருகின்றனர்.

    கோபப்பட்ட காயத்ரி ரகுராம்

    நெஞ்சுக்கு நீதி படத்தை தியேட்டரில் பார்த்த நடிகையும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராமை அழைத்து படம் பற்றி பேச பத்திரிகையாளர்கள் கேட்டதும், என்கிட்ட ஏன் கேட்கிறீங்க? என ஆரம்பத்தில் சீறினார். பின்னர், மைக் பிடித்து பேசிய காயத்ரி ரகுராம் படத்தை வெகுவாக பாராட்டியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    உதயநிதி நல்லா நடிச்சிருக்காரு

    உதயநிதி நல்லா நடிச்சிருக்காரு

    ஆயுஷ்மான் குரானா நடிச்ச ஆர்ட்டிக்கள் 15 படம் எனக்கு ரொம்பவே பிடிச்ச படம், அந்த படம் எப்படி தமிழில் வந்திருக்கு என்பதை பார்க்கவே வந்தேன். உதயநிதி ஸ்டாலின் ரொம்ப நல்லாவே நடிச்சிருக்காரு, நாங்க ரெண்டு பேரும் வேற வேற கட்சியா இருக்கலாம். ஆனால், சினிமா கலைஞரா நான் அவரை பாராட்டுறேன். எல்லோருக்கும் சமநீதி வேணும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடும் என்று கூறினார்.

    இந்துக்கள் ஒற்றுமையா இருக்கணும்

    இந்துக்கள் ஒற்றுமையா இருக்கணும்

    ஆனால், கடைசியில், தனது வேலையை காட்டுவது போல இந்தியர்கள் அனைவரும் மத பாகுபாடு இன்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சொல்லாமல், சாதி பாகுபாடுகளை பார்க்காமல் இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என அவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள், பாஜக காரங்க என்பதை பக்காவாக காட்டிட்டாங்களே என கலாய்த்து வருகின்றனர்.

    English summary
    Gayathri Raghuram praises Udhayanidhi Stalin’s Nenjuku Needhi with a BJP touch shocks fans. She also mentions Udhaynidhi Stalin’s acting was very good in this movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X