அய்யோ.. பயமாக இருக்கு.. காப்பாற்றுங்கள் முதலமைச்சர் விஜய்.. நடிகை காயத்ரி ரகுராம் போஸ்ட்டைப் பாருங்க
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக நடிகரும் தவெக தலைவருமான விஜய் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது ஆட்சி குறித்த விமர்சனங்களும் பாராட்டுக்களும் இருந்து வருகிறது. இதில் நடிகையும் அதிமுகவின் மகளிர் அணி மாநில துணை செயலாளருமான காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியை ஒரு கிறிஸ்தவ மிஷனரி ஆட்சி என்று விமர்சித்து பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் அவரை காட்டமாக விமர்சிக்க, முதலமைச்சர் விஜய் என்னைக் காப்பாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது அவரது பதிவில், " அய்யோ, பயமாக இருக்கிறது.
முதலமைச்சர் விஜய் வந்து என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!
உண்மையைச் சொன்னால்:
•ஜோசப் விஜய் - கிறிஸ்துவர்
•ஜான் ஆரோக்கியசாமி - மிஷனரி
ஜேசிடி பிரபாகரன் கிறிஸ்தவர்
•கலைச்செல்வன் - மிஷனரி
•மார்ட்டின் குடும்பம் - மிஷனரி
•மரியா வில்சன் - மிஷனரி
•அமல் ராஜ் - கிறிஸ்தவர்
•பிரிட்டோ அங்கிள் - மிஷனரி
•காங்கிரஸ் - மிஷனரி
•வன்னியரசு - மிஷனரி
•விசிக - மிஷனரி
•கம்யூனிஸ்ட் - செமி மிஷனரி
சட்ட ஆலோசகர்கள் கிறிஸ்தவர்கள்.
கீ போஸ்டிங்கில் இருப்பவர்கள் எல்லாருமே மிஷனரிகள்.
திமுக மறைமுக மிஷனரி; ஆனால் தவெக நேரடியாக மிஷனரி.
5 ஆண்டுகள் திமுக நேரடியாக எதுவும் செய்யவில்லை. ஆனால் இப்போது நேரடியாக பிரிட்டிஷ் கொள்கையில் "சோசியல் செக்யூலர் தமிழ்நாடு" உருவாக்க முயற்சி நடக்கிறது.

சினிமாவில் இருப்பவர்கள்: சினிமாவில் இருந்ததால் விஜய் அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறார் என்று நம்பலாம். ஆனால், தவெக முழுமையாக மிஷனரிகளின் தாக்கத்தில் உள்ளது என்ற கருத்து தமிழ்நாட்டில் பலரிடமும் உள்ளது. இது மக்கள் கருத்து. தெரிந்துகொள்ளுங்கள். நாம் விரும்புவது மனிதநேய அரசியல் - தர்மம், நேர்மை, நியாயம் வழிநடத்தும் ஆட்சி. அதுவே அனைவருக்குமான அரசியல்; அதுவே அதிமுக ஆட்சி" என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் அதைத் தொடர்ந்த பதிவில், " சினிமாவில் இருப்பவர்கள் பொதுவாக சாதி, மத வேறுபாடுகளை நம்புவதில்லை. நாங்கள் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கிறோம்; ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்கிறோம்.

ரியாக்ஷன்ஸ்: நான் இயேசுவை வேண்டிக்கொள்கிறேன்; என் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகியவற்றையும் கொண்டாடுகிறேன். தமிழ்நாட்டில் எந்த விதமான பிரிவினை சிந்தனையும் ஆட்சியை கட்டுப்படுத்தக் கூடாது. அது கிறிஸ்தவ மிஷனரி அமைப்பாக இருந்தாலும், இந்துத்துவ அமைப்பாக இருந்தாலும், அல்லது ஜமாத் அமைப்பாக இருந்தாலும் - எந்த ஒரு அமைப்பும் ஒரு மாநிலத்தை கட்டுப்படுத்தக் கூடாது. ஆன்மிகம் (Spirituality) என்பது வேறு; மத அமைப்புகள் (religious organisations) அல்லது மிஷனரி அமைப்புகள் என்பது வேறு என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்" என்றும் பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு இணையத்தில் கடுமையான எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications