டிவிட்டர் கணக்கை மீட்ட காயத்ரி ரகுராம்.. வெல்கம் பேக் அக்கா.. சந்தோஷமாய் வரவேற்ற பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: நடிகை காயத்ரி ரகுராம் மீண்டும் தனது டிவிட்டர் கணக்கை மீட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது அதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
குறிப்பாக அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்திருந்தார். தொல்லியல்துறை நடத்திய ஆராய்ச்சியில் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்றும் விமர்சித்திருந்தார்.

இந்து அமைப்புகள் கண்டனம்
திருமாவளவன் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அவரது பேச்சுக்கு பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

காயத்ரி ரகுராம் கண்டனம்
அதற்கு நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார்.

டிவிட்டர் கணக்கு முடக்கம்
இதனால் அவரது வீட்டின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் அவரது டிவிட்டர் கணக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டது.
இறுதியாக மீட்டுவிட்டேன்
இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் கணக்கை மீட்டுள்ளார். இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இறுதியாக என்னுடைய கணக்கை மீட்டுவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் ஜூலி
காயத்ரி ரகுராமின் இந்த டிவிட்டை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வரவேற்றுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி, வெல்கம் பேக் அக்கா என டிவிட்டியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











