குடிபோதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி.. போலீசிடம் வாக்குவாதம் செய்த பிக் பாஸ் காயத்ரி ரகுராம்!

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக காயத்ரி ரகுராமுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Recommended Video

குடிபோதையில் காரை ஓட்டிபோலீசிடம் வாக்குவாதம் செய்த காயத்ரி ரகுராம்?

சென்னை: சென்னையில் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய நடிகை காயத்ரி ரகுராமை மடக்கிப் பிடித்த போலீசாரிடம் காயத்ரி ரகுராம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகளும், டான்ஸ் மாஸ்டருமான நடிகை காயத்திரி ரகுராம் (34), சார்லி சாப்லின் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஏடாகூடமாக கருத்து தெரிவித்து சில சமயம் சர்ச்கைகளிலும் சிக்கிக் கொள்வார்.

வீக் எண்ட் பார்ட்டி:

வீக் எண்ட் பார்ட்டி:

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வீக் எண்ட் பார்ட்டி நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர், நடிகையர் பலர் கலந்து கொண்டனர். காயத்ரி ரகுராமும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டு மது அருந்தியதாகத் தெரிகிறது. பின்னர் மது போதையில் தன் சொகுசு காரில் அவர் தாறுமாறாகக் சென்றுள்ளார்.

சோதனை:

சோதனை:

சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே போலீசார் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது காரில் இருந்து இறங்கிய காயத்ரி ரகுராமிடம் இருந்து மது வாடை வந்ததால் போலீசார் சந்தேகமடைந்தனர். அவரை மதுபோதை பரிசோதிக்கும் கருவியால் போலீசார் சோதிக்க முடிவு செய்துள்ளனர்.

வாக்குவாதம்:

வாக்குவாதம்:

ஆனால் அதற்கு அவர் ஒத்துழைக்கவில்லை. மாறாக, ‘நீங்கள் தான் குடித்து விட்டு பணியில் உள்ளீர்கள்' என போலீசாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஒரு வழியாக மதுபோதை சோதிக்கும் கருவியில் அவர் ஊதினார். அதில், காயதிரி ரகுராம் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அபராதம்:

அபராதம்:

இதன்பிறகு, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ரூ.2500 அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் காரை ஓட்டிச் செல்ல அனுமதிக்காத போலீசார், தாங்களே அவரது காரை ஓட்டிச் சென்று வீட்டில் கொண்டு விட்டனர்.

அபராதத் தொகை:

அபராதத் தொகை:

பின்னர், அபராதத் தொகையை அபிராமபுரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் செலுத்திய பிறகு நேற்று தனது காரை அவர் அங்கிருந்து எடுத்துச்சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X