ஜீ5 இல் வெளியானது காயத்ரி ரகுராமின் யாதுமாகி நின்றாய்.. தன்னுடைய முதல் குழந்தை என உருகும் நடிகை!

சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகை இயக்கி நடித்துள்ள யாதுமாகி நின்றாய் திரைப்படம் ஜீ5 தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.

நடன இயக்குநராகவும் நடிகையாகவும் இருப்பவர் காயத்ரி ரகுராம். இவர் பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவர் ஆவார்.

தனது கட்சிக்காக சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார்.

Gayathri Ragurams Yaadhumaagi Nindraai movie released in Zee5

இந்நிலையில் காயத்ரி ரகுராம் இயக்கி தயாரித்த படம் யாதுமாகி நின்றாய். உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னணி நடனக் கலைஞர்களின் அன்றாட வாழ்க்கையில் நிகழும் பல உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது.

காயத்ரி ரகுராம், நிவாஸ் அதிதன் நடித்துள்ள இப்படம் ஜீ5 தளத்தில் நேற்று வெளியானது. முன்னதாக இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் எனது படம் யாதுமாகி நின்றாய் ஜீ5 தளத்தில் வெளியிடப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஜூன் 19 எனக்கு பெரிய நாள். இயக்குனராக எனது முதல் குழந்தை என்று அழைக்கிறேன். எல்லோரும் அதைப் பார்த்து ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். என்னை ஆசிர்வதியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Gayathri Ragurams Yaadhumaagi Nindraai movie released in Zee5

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X