அய்யோ கிருஷ்ணா நீங்களா.. என் தோழியின் கணவர்.. இதயமே நொறுங்கிடுச்சு.. பயங்கர ஷாக்கில் பிரபல நடிகை!

Recommended Video

Indian 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த கிருஷ்ணா குறித்து பிரபல நடிகை அதிர்ச்சியுடன் டிவிட்டியிருக்கிறார்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு சென்னை நசரத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக பிரமாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்று பேர் பலி

மூன்று பேர் பலி

இந்நிலையில் நேற்றிரவு படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கிரேன் சரிந்து விழுந்தது. இதில் படக்குழுவை சேர்ந்த மூன்று பேர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தனர். உதவி இயக்குநர் கிருஷ்ணா, புரடெக்ஷன் அசிஸ்டென்ட் மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் ஆகியோர் மரணமடைந்தனர்.

உதவி இயக்குநர்

உதவி இயக்குநர்

இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் ஆவார். மதனின் இளைய மகள் அமிதாவை காதல் திருமணம் புரிந்தார் கிருஷ்ணா. இருவரும் சேர்ந்து பல விளம்பரப் படங்களை இயக்கி இருக்கின்றனர். கிருஷ்ணா, மதராசப்பட்டினம் படத்தில் இயக்குநர் ஏஎல் விஜயிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

இந்தியன் 2 படம்

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் அகால மரணமடைந்துள்ளார் கிருஷ்ணா. இதனையறிந்த நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஸ்ரீ கிருஷ்ணா நீங்கள் இந்தியன் 2 படத்தில் ஷங்கர் சாருக்கு உதவியாக இருந்தது இப்போதுதான் தெரிந்தது.

தோழியின் கணவர்

என் இதயமே நொறுங்கிவிட்டது, அதிர்ச்சியில் இருக்கிறேன், பேச முடியவில்லை என பதிவிட்டுள்ளார். மேலும் எனக்கு அவரை தெரியும். அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அவர் மதராசப்பட்டினம் படத்தில் இயக்குநர் ஏஎல் விஜயிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். என் தோழியின் கணவர். ரொம்பவே அதிர்ச்சியாக உள்ளது. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X