அங்க கை வெச்சு.. ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்குநர் தப்பா நடந்துக்குட்டார்.. நயன்தாரா பட நடிகை பகீர்
சென்னை: நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம் டூரிங் டாக்கீஸ். இதில் நடித்தவர் காயத்ரி ரேமா. இந்தப் படம் தவிர்த்து நயன்தாரா மெயின் ரோலில் நடித்த டோரா படத்திலும் நடித்திருக்கிறார். இவை தவிர்த்து விழித்தெழு, பேய் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார் காயத்ரி ரேமா.இந்தச் சூழலில் அவர் தன்னிடம் இயக்குநர் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என்று ஓபனாக பேசியிருக்கும் விஷயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இப்போதைய காலம்வரை அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை பெண்களுக்கு தீர்ந்தபாடில்லை.

ஹீரோயின்களின் ஓபன் டாக்ஸ்: அட்ஜெட்ஸ்ட்மெண்ட்டால் தாங்கள் சந்திக்கும் கொடுமை குறித்து நடிகைகள் வெளியில் பேசுவது அரிதிலும் அரிதுதான். ஆனால் சமீபகாலமாக தைரியமாக அனைத்தையும் பேசிவருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கான அப்ரோச் போயிருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார்.
வாரிசு நடிகையிடமும்: அதேபோல் சினிமாவில் வாரிசு நடிகையாக அறியப்படும் வரலட்சுமியிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் நடந்திருக்கிறது. தந்தை சினிமாவில் இருந்தும்கூட வரலட்சுமியிடம் இப்படி அப்ரோச் போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜெட்ஸ்ட்மெண்ட் அப்ரோச் குறித்து ஓபனாக பேசிவருகிறார்கள்.

காயத்ரி ரேமா: இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை காயத்ரி ரேமா கூறியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், "நடிகை பிந்து மாதவியை வைத்து அந்த இயக்குநர் படம் எடுத்தவர். அவரது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. சொல்லப்போனால் நான் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தது என்பதுதான் உண்மை.
அப்படி நடந்துகொண்டார்: படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த இயக்குநருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென எனது பின் பகுதியில் கை வைத்துவிட்டார். உடனே எனக்கு கோபம் உச்சிக்கு ஏறிவிட்டது. நான் அவரிடம், கையை எடுங்கள். இது உங்களோட ஷூட்டிங் ஸ்பாட். இங்கே வைத்து உங்களை ஓங்கி அறைந்தால் அது உங்களுக்குத்தான் அசிங்கம். இதெல்லாம் எனக்கு பிடிக்காது என்று கூறினேன். அதற்கு அவர் உடனே, நீ அப்படி இருக்குற. உன்னை பார்த்தவுடன் எனக்கு வேற மாதிரி தோணிடுச்சு என்று பச்சையாக பேசினார். அந்த இயக்குநரின் பெயரை சொல்ல விரும்பவில்லை" என்றார். அவரது இந்தப் பேட்டியை அடுத்து அந்த இயக்குநர் யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் துலாவ ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











