குடித்து விட்டு கார் ஓட்டிய விவகாரம்.. காயத்ரி சொல்வதில் பாதி உண்மை.. பாதி பொய்யாமே!

Recommended Video

குடிபோதையில் வாகனம் ஓட்டினேனா- காயத்ரி ரகுராம் பரபரப்பு வீடியோ

சென்னை: பிரபல டான்ஸ் மாஸ்டரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் குடித்து விட்டு கார் ஓட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேலும் சில தகவல்கள் தெரிய வந்துள்ளது.

பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகளும், டான்ஸ் மாஸ்டருமான நடிகை காயத்திரி ரகுராம் (34), சனிக்கிழமை இரவு குடித்து விட்டு சொகுசு கார் ஓட்டிச் சென்றதாகவும், இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் நேற்று செய்தி வெளியானது.

ஆனால், இது உண்மையில்லை என்று காயத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்திருந்தார். சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் அவருடன் காரில் பயணித்த நடிகை காஜலும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனக் கூறியிருந்தார்.

பாதி பொய்... பாதி உண்மை:

பாதி பொய்... பாதி உண்மை:

இந்நிலையில், உண்மையில் அந்த நள்ளிரவில் நடந்தது என்ன என்பது குறித்து நமக்கு சில நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்மூலம் காயத்ரி கூறியதில் சில உண்மை என்பதும், ஊடகங்களில் வெளியான செய்திகளில் சில உண்மை இருந்ததும் தெரிய வந்துள்ளது.

சந்தேகம்:

சந்தேகம்:

அதாவது காயத்ரி சொன்னபடி அவர் வீக் எண்ட் பார்ட்டிக்கு செல்லாமல், படப்பிடிப்புக்கு சென்றுகூட திரும்பியிருக்கலாம். ஆனால், சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே போலீசார் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தியது உண்மை. அப்போது காரில் இருந்து இறங்கிய காயத்ரி ரகுராமிடம் இருந்து மது வாடை வந்ததால் போலீசார் சந்தேகமடைந்தனர். அவரை மதுபோதை பரிசோதிக்கும் கருவியால் போலீசார் சோதிக்க முடிவு செய்துள்ளனர்.

எச்சரிக்கை:

எச்சரிக்கை:

அதில் காயத்ரி மது அருந்தி இருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட சிறிதளவே அவர் கூடுதலாகக் குடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்போது பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அவரை எச்சரித்து, வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் அவரை வீட்டிற்கு செல்ல அனுமதித்துள்ளனர்.

எப்படி வெளியானது?

எப்படி வெளியானது?

வழக்கமாக அந்நேரத்தில் இது போன்ற பல சம்பவங்கள் அந்த இடத்தில் நடைபெறுவது வழக்கம். எனவே, பிரபலங்கள் யாரேனும் சோதனையில் சிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் பத்திரிகையாளர் ஒருவர் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். அவர் மூலம் தான் காயத்ரியிடம் மதுபோதை பரிசோதனை நடைபெற்றது ஊடகங்களில் செய்தியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X