பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள்: ஜிவி பிரகாஷ் ஹீரோயின் பகீர்

By Siva

திருவனந்தபுரம்: பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு தனக்கு சிலர் மெசேஜ் அனுப்பியதாக நடிகை காயத்ரி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் காயத்ரி சுரேஷ். மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்துகிறார்.

Gayathri Suresh talks about casting Couch

வெங்கட் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள 4ஜி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் காயத்ரி சுரேஷ். இன்னும் வெளிவராத இந்த படம் மூலம் காயத்ரி கோலிவுட் வந்துள்ளார்.

தற்போது அவர் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

சில தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என்றார்கள். பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் பண்ண தயாரா என்று கேட்டு எனக்கு மெசேஜ் அனுப்பினார்கள். அது போன்ற மெசேஜுகளுக்கு நான் பதில் அளிப்பது இல்லை. பதில் அளித்தால் தானே பேச்சு தொடரும். பதில் அனுப்பாவிட்டால் அவர்களுக்கு நம் எண்ணம் புரிந்துவிடும் என்றார்.

மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகம் உள்ளது என்று சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். மரியான் படம் புகழ் பார்வதி கூட பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து பேசினார். படுக்கைக்கு செல்ல மறுத்ததால் பல பட வாய்ப்புகளை இழந்ததாக அவர் தெரிவித்தார்.

மலையாள திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. அப்படி இருக்கும் போது அது குறித்து அறிந்து அனைவரும் வியப்பது ஏன் என்று புரியவில்லை. அது பல துறைகளிலும் உள்ளது. இது தான் உண்மை. தமிழ், கன்னடம், இந்தி திரையுலகில் பட வாய்ப்புக்காக யாரும் என்னை படுக்கைக்கு அழைக்கவில்லை. மலையாள திரையுலகில் மட்டுமே அழைக்கப்பட்டேன் என்று முன்பு பார்வதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து பல நடிகைகளும் மனம் திறந்து பேசத் துவங்கினார்கள். தனுஸ்ரீ வழக்கில் ஆதாரம் இல்லை என்று கூறி நானா படேகரை விட்டுவிட்டனர். இதை பார்த்த நடிகைகள் தற்போது துணிச்சலாக பேச அஞ்சுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X