விஜய் 'ஷில்பா' சேதுபதியை செமயாக சைட் அடித்தேன்: உண்மையை சொன்ன நடிகை
சென்னை: சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தபோது காயத்ரி ஒருவரை சைட் அடித்துள்ளார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் படம் குறித்து காயத்ரி கூறியதாவது,

சூப்பர் டீலக்ஸ்
தியாகராஜன் குமாரராஜா நிஜத்தில் அமைதியானவர். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் ஆளே மாறிவிடுவார். தான் விரும்பியதை திரையில் கொண்டுவர மெனக்கெடுவார். அவரா இவர் என்று ஆச்சரியமாக இருக்கும்.

பயம்
சூப்பர் டீலக்ஸ் படத்தில் பிற நடிகர்கள் அதிக டேக்குகள் வாங்கியுள்ளனர். நான் ஷூட்டிங்கிற்கு வந்தபோது ஒரு நடிகர் என்னிடம் வந்து நான் ஒரு காட்சியை 25 முறை நடித்தேன். அதன் பிறகே இயக்குநர் திருப்தி அடைந்தார் என்றார். அதை கேட்டு எனக்கு பயம் வந்தது.

காயத்ரி
எனக்கு எப்பொழுதுமே முதல் டேக் தான் நன்றாக வரும். இந்த படத்தில் நமக்கு எத்தனை டேக் வரப் போகுதோ என்று பயந்தேன். நல்ல வேளை அதிக டேக்குகள் வரவில்லை. விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கும்போது எங்களுக்கு இடையே நடிப்பில் போட்டி இருக்கும்.

ஷில்பா
சூப்பர் டீலக்ஸ் ஷில்பா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விஜய் சேதுபதியின் ஆண் தோற்றத்தை அந்த அளவுக்கு சைட் அடிக்கவில்லை. ஆனால் ஷில்பாவை கண்டமேனிக்கு சைட் அடித்தேன். ட்ரெய்லரை பார்த்த பிறகு உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என்று விஜய் சேதுபதியிடம் கூறினேன் என்றார் காயத்ரி.


Click it and Unblock the Notifications











