»   »  ஓவியா பற்றி பிக்பாஸ் காயத்ரி ட்வீட்.. எரிச்சலான நெட்டிசன்ஸ்!

ஓவியா பற்றி பிக்பாஸ் காயத்ரி ட்வீட்.. எரிச்சலான நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நெட்டிசன்ஸை ஒழிக்க சபதம் எடுத்திருக்கும் பிக் பாஸ் காயத்ரி!- வீடியோ

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க பல்வேறு முறைகளில் போராட்டங்கள் நடைபற்று வருகின்றன. திரையுலகினரும் இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார்கள்.

இன்று சென்னைக்கு வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியும், கறுப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். #GoBackModi எனும் ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், பிஜேபி கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், இப்போதிருக்கும் பிரச்னையையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு ஆதரவு கிடைக்காததையும் இணைத்து ட்வீட் போட்டு வருகிறார்.

காயத்ரி ரகுராம்

"நான் பிக்பாஸில் இருந்தபோது என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். தமிழ்ப் பெண்ணான என்னை ஆதரிக்க தமிழ்நாட்டு மக்களிடம் நான் வேண்டினேன். ஆனால் சோசியல் மீடியா மக்கள் நான் தமிழச்சியாக இருந்தபோதிலும், சரியானவர் என ஒரு கேரள நடிகையை தேர்வு செய்தீர்கள்? இப்போதும் ஏன் அதையே செய்யவில்லை?" எனக் கேட்டிருக்கிறார்.

இதுல ஏன் பிரிவினை

சிம்பிள் லாஜிக். அவங்க உண்மையா இருந்தாங்க. நீங்க பொய்யா இருந்தீங்க. இதுல ஏன் கேரளா தமிழ்நாடுன்னு பிரிச்சுப் பாக்குறீங்க.. பாஜக ஆள் ஆச்சே..!

இதுக்குத்தான் சப்போர்ட் பண்ணல

எல்லோரும் கர்நாடகாவா தமிழ்நாடான்னு கேக்குறப்போ நீங்க மட்டும் கேரளாவா தமிழ்நாடான்னு பேசுறீங்களே... அதுக்குத்தான் சப்போர்ட் பண்ணல.

மதிக்கலைன்னு அர்த்தம்

உங்களை தமிழ்ப்பெண்ணா நாங்க மதிக்கலைன்னு அர்த்தம். அது ஏன்னு ரூம் போட்டு யோசிங்க. ஓவியா, திராவிட வீர மங்கை. டைட்டில் வெல்லலைன்னாலும் ஓவியாதான் தமிழர்களின் மனதை வென்றவர்.

பிக்பாஸ் தெரியும் உங்களுக்கு அரசியல் தெரியவில்லையே

நீங்கள் பிக்பாஸில் என்னை ஆதரிக்கவில்லை, ஏனென்றால் நான் தமிழச்சி என்பதால் கெட்டவள் என்று நினைக்கிறீர்கள். அப்புறம் ஏன் தீய திராவிடக் கட்சிகளை நம்புகிறீர்கள்? நம் அனைவரையும் முட்டாளாக்குவது யார்? தமிழச்சியை விட நீங்கள் கேரளத்தைச் சேர்ந்தவரை பிக்பாஸில் தேர்வு செய்கிறீர்கள். சாதாரண பிக்பாஸில் சரி எது தவறு எது என அறியும் உங்களுக்கு ஏன் அரசியல் தெரியவில்லை?

ஊரை வச்சு எடை போட மாட்டோம்

எளிமையான விஷயம். நாங்க மனிதர்களை அவங்களோட சொந்த ஊரை வச்சு எடை போடுறது இல்ல. உண்மையான மனிதர்களுக்குத் தான் நாங்க ஆதரவு தருவோம். அது நீங்களோ மோடியோ நிச்சயமா இல்லை.

English summary
Gayathri Raguram of the BJP party tweets about present problem and BiggBoss program. Thus, the netizens are irritated.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X