ஒரே ஒரு பொண்ணுன்னா அதைக்கூட பார்க்க மாட்டாங்க.. படப்பிடிப்பு தளத்தில் காயத்ரிக்கு நடந்த தர்ம சங்கடம்

சென்னை: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, விக்ரம், மாமனிதன் என நடிகர் விஜய்சேதுபதியுடன் பல படங்களில் இணைந்து நடித்த நடிகை காயத்ரி சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த தர்ம சங்கடத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.

இந்த காலத்தில் நடிகர்கள், நடிகைகளுக்கு கேரவன் வசதி உள்ளது என்றும் எங்க காலத்தில் மரத்துக்கு பின்னாடி நின்னுலாம் உடை மாத்தியிருக்கோம் என பழம்பெரும் நடிகைகள் பேட்டி அளித்துள்ள நிலையில், காரிலேயே உடை மாற்றியிருக்கேன் என காயத்ரி சொல்லி அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.

Gayathrie Shankar reaveals her discomforts during some production house dint provide even bathroom

மேலும், சில முக்கியமான விஷயங்களை கூட படக்குழுவினர் நடிகைகளை கருத்தில் கொண்டு செய்ய மறுக்கின்றனர் என குற்றச்சாட்டுக்களையும் அடுக்கி உள்ளார்.

நான் ஹோம்லி இல்லை மாடர்ன்: ரம்மி, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் சேலை அணிந்து கொண்டும் பாவாடை தாவணி அணிந்து கொண்டும் அதிகப்படியாக கிராமத்து பெண்ணாகவே நடித்து வரும் காயத்ரி ரொம்ப ஹோம்லி என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், நான் படத்துக்காகத் தான் அப்படி நடிக்கிறேன். ஆனால், என் கேரக்டர் ரொம்பவே மாடர்னான பொண்ணு நான் என பேசியுள்ளார்.

Gayathrie Shankar reaveals her discomforts during some production house dint provide even bathroom

சமீபத்தில், என் ஹேர்ஸ்டைலை இப்படி கட் பண்ணதுக்கே ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. உங்களுக்குப் பிடிக்கலைன்னா தயவு செஞ்சு கமெண்ட் பண்ணாதீங்க, நான் என் இஷ்டத்துக்குத்தான் இருப்பேன் என்றார்.

பாத்ரூமே இருக்காது: அதிகமாக லோ பட்ஜெட் படங்களில் நடித்து வரும் நடிகை காயத்ரி ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் மட்டுமே பெண்ணாக சில படங்களில் இருந்த நிலையில், பாத்ரூம் கூட இருக்காது என்றும் அதை கூட யோசிக்காமல் தயாரிப்பு தரப்பு அப்படியே கண்டுக்காமல் விட்டு விடுவது தர்ம சங்கடத்தை உண்டாக்கி விடும். நானும் அதுபோன்ற கஷ்டமான சூழல்களில் சிக்கித் தவித்திருக்கேன் எனக் கூறியுள்ளார்.

Gayathrie Shankar reaveals her discomforts during some production house dint provide even bathroom

மேலும், ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு லொகேஷனுக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, நடுவிலேயே ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, இங்கே ஒரு மாண்டேஜ் எடுத்துக்கலாம், நீங்க கொஞ்சம் கார்லயே டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடுங்கன்னு கூலா சொல்லிட்டாங்க, எனக்கு செம கஷ்டமா போயிடுச்சு, அட்லீஸ்ட் டிரெஸ் மாத்த நடிகைகளுக்கு ஒரு ரூமாவது அரேஞ்ச் பண்ணனும் என அந்த பேட்டியில் வெளிப்படையாக தான் அனுபவித்த தர்மசங்கடங்களை பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X