அவசரத்துக்கு கேரவன்ல ஏறினேன்.. அந்த ஹீரோயினோட அம்மா விரட்டி விட்டாங்க.. நடிகை காயத்ரி ரேமா வேதனை!

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி ரேமா. எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், சினிமா மற்றும் வெப்சீரிஸ் என பல படைப்புகளில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்த 'வா வரலாம் வா' படத்திலும் இவர் நடித்துள்ளார்.

சினிமாவில் தான் பெரிதாக ஷைன் ஆகாமல் போனதற்கு காரணமே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண மாட்டேன் என்கிற முடிவில் இருப்பது தான் என குண்டை தூக்கிப் போட்டுள்ளார். நடிக்க சொன்னால், ஓகே நடிப்பதற்காக படுக்க சொன்னால் எப்படி பாஸ். பாலிவுட்டில் நடிகர் சல்மான் கானே லிப் கிஸ் காட்சியில் நடிக்க மாட்டேன் என இருக்கிறார். அதே போல நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சென்றாலும் நிர்வாண காட்சிகளில் பாடி டபுள் வேண்டுமானால் பயன்படுத்துங்க நான் நடிக்க மாட்டேன்னு போல்டாக இருக்கிறார்.

Gayatri Rema reveals popular actress mom humiliated her for using caravan bathroom to change napkin

திறமைக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஆனால், இங்கே சிலர் திறமையை பார்ப்பதே இல்லை. ஆசைக்கு யாரெல்லாம் இணங்குறாங்களோ அவங்களுக்குத்தான் அதிகமாக சான்ஸ் கொடுக்கிறாங்க என பேசி பகீர் கிளப்பி உள்ளார்.

நாப்கின் மாற்ற முடியாது: பெண்களுக்கு இயற்கையாகவே பீரியட்ஸ் வரும்போது அந்த 4 நாள் ரொம்பவே கஷ்டமா இருக்கும். அதுவும் சினிமாவில் பாலை வனத்தில் இறக்கி விட்டு நடிக்க வைக்கும் போதெல்லாம் நடிகைகளின் நிலைமை ரொம்பவே சங்கடமான சூழலுக்கு தள்ளப்படும். சரியான பாத்ரூம் அரேஞ்ச்மெண்ட்ஸ் இருக்காது. அட்லீஸ்ட் ஹீரோயின்களின் கேரவனையாவது பயன்படுத்த அனுமதித்தாலும் இப்படியொரு பிரச்சனை உள்ளது என வெளிப்படையாக பேசியுள்ளார்.

பாத்ரூம் வசதி இல்லை: ஒருமுறை ஏர்போர்ட் அருகே படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென பீரியட்ஸ் ஏற்பட மேனேஜரிடம் போய் பாத்ரூம் வசதியிருக்கிறதா எனக் கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்றார். சரி, அப்படின்னா பக்கத்துல கிண்டியில தான் என் வீடு இருக்கு ஒரு 10 நிமிஷத்துல போயிட்டு நாப்கின் வச்சிட்டு வரேன்னு சொன்னேன். உடனடியாக ஹீரோயின் கேரவன் இருக்கு அதை யூஸ் பண்ணிக்கோங்க என்றார்.

ஹீரோயின் அம்மா விரட்டுனாங்க: அவர் ரொம்பவே யோசித்து கேரவனில் உள்ள பாத்ரூமை பயன்படுத்திக்க அனுமதி கொடுத்த நிலையில், கேரவனுக்குள் சென்று நாப்கின் சேஞ்ச் பண்ணிட்டு வந்தேன். அங்கே இருந்து ஹீரோயின் அம்மா ஓடி வருது. எப்படி கண்டவங்களையும் என் பொண்ணோட கேரவனுக்குள்ள அலோ பண்ணலாம் என சண்டை போட்டு என்னை வெளியவே தள்ளிட்டாங்க, இப்படியெல்லாம் அசிங்கம் எனக்கு நடத்திருக்கு என காயத்ரி ரேமா சினிமாவில் இளம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் நடிகைகளின் அம்மாவும் ஒரு பெண்ணாக இருந்தாலும், பெண்களின் அந்த பிரச்சனை எல்லாம் அவர்கள் யோசிக்கக் கூடமாட்டார்கள் என்பதை வேதனையுடன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X