GBU Memes: ஏப்ரல் 10 இட்லி கடை உடைக்கப்படும்.. மீம் போட்டு தனுஷை பங்கமாக கலாய்க்கும் அஜித் ரசிகர்கள்

சென்னை: தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தற்போது பரவலாக பேசி வரும் விஷயம் என்றால் அது குட் பேட் அக்லி படத்தின் டீசர் குறித்து விஷயங்களைத்தான். ஒன்றரை நிமிட டீசரில், அஜித்துக்கு மாஸ் காட்சிகள் எல்லாம் நிறைந்து உள்ளது என்றால், படம் முழுவதும் பார்க்கும் போது எத்தனை காட்சிகள் உள்ளதோ என்ற ஆவல் அஜித் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில், அஜித் ரசிகர்கள், தனுஷையும் தனுஷின் இட்லி கடை படத்தையும் மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நான்காவது படமான இட்லி கடை படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது மட்டும் இல்லாமல், படத்தில் தனுஷ் நடிக்கவும் செய்துள்ளார் என்பதால் இந்த படத்தின் மீது தனுஷ் ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு உள்ளது. படத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Ajithkumar Dhanush Idly Kadai Good Bad Ugly

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படமும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. குட் பேட் அக்லி மற்றும் இட்லி கடை என இரண்டு படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகவுள்ளதால், அஜித் ரசிகர்கள் தனுஷ் மற்றும் தனுஷின் இட்லி கடை குறித்து மீம் போட்டு பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

இட்லி கடை மீம்: வெகு சில ரசிகர்களே அதேபோல் நடந்து கொண்டாலும், இவர்களின் சமூக வலைதள நடவடிக்கை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் சில ரசிகர்கள் எல்லாம், படத்தின் டீசரைப் பார்க்க வரும்போது இட்லி சமைக்கும் பாத்திரத்தை ஒரு கட்டையில் கட்டி, மாலை போட்டு தூக்கி வந்தார்கள். அப்போது அந்த ரசிகர்களும் அவர்களுடன் இருந்த ரசிகர்களும், 'இட்லி கடை உடைக்கப்படும்' என கோஷமிட்டு வந்தார்கள்.

வடிவேலு மீம்: அதேபோல் 90களில் வெளியான ஒரு படத்தின் காட்சியைப் பகிர்ந்துள்ளார்கள். அதில் கார்த்திக் ஃபைட்டின் ரிசல்ட் என்ன மேன் எனக் கேள்வி கேட்க, அதற்கு வடிவேலு, இட்லி கடை தரிசாகி விட்டது எனக் கூறுகிறார். அதேபோல் மற்றொரு மீமில், வடிவேலு ஒரு தள்ளுவண்டிக் கடையை அடித்து நொறுக்குகிறார். இந்த மீமுக்கு ஏப்ரல் 10 ரிசல்ட் இதுதான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிலீஸ் தேதி மாற்றம்: மற்றொரு மீமில், குட் பேட் அக்லி படத்தின் டீசரில் அஜித் ஒரு மேஜையை குத்துவார். அப்போது மேஜை மீது இருக்கும் பாத்திரங்கள் பறக்கும். இந்த ஸ்கிரீன் ஷாட்டை வைத்து உருவாக்கப்பட்ட மீம்க்கு, "Broo took personally 😂" என கேப்ஷன் இடப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்களில் சிலர் இதுபோல மீம் போட்டு கலாய்த்து வந்தாலும், தனுஷ் ஏற்கனவே இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அஜித் ரசிகர்கள் சிலர் இது போல தொடர்ந்து ஏதாவது மீம் போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என்று சினிமா வட்டாரங்களில் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X