GD Naidu Biopic: அட்ராசக்க! அறிவியல் மேதை ஜிடி நாயுடுவாக மாறிய மாதவன்.. வெளியானது சூப்பர் போஸ்டர்!
சென்னை: நடிகர் மாதவன் அடுத்ததாக ஜிடி நாயுடுவின் பயோபிக்கில் நடிக்கப் போவதாக அசத்தல் போஸ்டருடன் சூப்பரான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அலைபாயுதே படத்தில் லவ்லி பாயாக அறிமுகமான மாதவன் சீமான் இயக்கத்தில் வெளியான தம்பி படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக கொடுமைகளை கண்டு பொங்குபவராக நடித்திருந்தார்.
அதன் பின்னர், வடிவேலுவுடன் இணைந்து ஆர்யா உள்ளிட்ட காமெடி படங்களிலும் நடித்திருந்தார் மாதவன்.

நம்பி நாராயணனாக மாதவன்: அனுஷ்காவுடன் சைலன்ஸ் படத்தில் திடீரென வில்லத்தனத்தில் மிரட்டிய மாதவன், விஞ்ஞானி நம்பி நாராயணனாக ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் அப்படியே வாழ்ந்திருந்தார். முதன் முதலாக நடிப்பது மட்டுமின்றி அந்த படத்தின் மூலம் இயக்குநர் அவதாரத்தையும் எடுத்து தான் ஒரு படைப்பாளியும் கூட என்பதை நிரூபித்த நடிகர் மாதவன் அடுத்ததாக முதல் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்ட பல அரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்திய ஜிடி நாயுடுவின் பயோபிக்கை கையில் எடுத்திருக்கிறார்.
ஜிடி நாயுடு கெட்டப்பில் மாதவன் பின்னாடி திரும்பி நிற்கும் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை மீடியா ஒன் லிமிடட் தயாரிப்பதாக மட்டுமே அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்தையும் மாதவனே இயக்கப் போகிறாரா? அல்லது வேறு யாராவது இயக்குகிறார்களா? மற்றும் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

ஜிடி நாயுடு பயோபிக்: ராக்கெட்ரி படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனாகவே மாறிய மாதவன் தற்போது ஜிடி நாயுடுவாக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கப் போகிறார் என்கிற செய்தியே அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஏகப்பட்ட அரிய கண்டுபிடிப்புகளை செய்து அசத்திய கோவையை சேர்ந்த ஜிடி நாயுடுவை பற்றி இப்போதாவது ஒரு பயோபிக் திரைப்படம் உருவாகப் போகிறதே என்றும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்தின் முதல் போஸ்டரை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். நிச்சயம் இந்த படமும் மாதவனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தைத் தொடர்ந்து இந்தியில் தோகா: ரவுண்ட் தி கார்னர் எனும் படத்தில் நடித்திருந்தார் மாதவன். ஆனால், அந்த படம் அவருக்கு எந்தவொரு பயனையும் தரவில்லை. இந்நிலையில், அறிவியல் மேதை தமிழக விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் கண்டுபிடிப்புகளையும், அவர் வாழ்வில் பட்ட கஷ்டங்களையும் பட்டியலிட்டு படமாக காட்டும் முயற்சியில் இறங்கி விட்டார் மாதவன் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











