GD Naidu Trailer: ஜி.டி. நாயுடுவை கண் முன் நிறுத்திய மாதவன்.. ஜி.டி.என் டிரைலர் எப்படி இருக்கு?

சென்னை: வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள ஜி.டி. நாயுடு படத்தின் டிரைலர் தற்போது வெளியானது. கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் இந்தியாவின் எடிசன் என போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் பயோபிக் உருவாகி உள்ளது. விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்து அசத்திய மாதவன் இந்த படத்தில் ஜி.டி. நாயுடுவாகவே வாழ்ந்துக் காட்டியுள்ளார்.

கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாதவன், சத்யராஜ், ஜெயராம், வினய், பிரியாமணி, துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜூலை 17ம் தேதி ரிலீஸ் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விரைவில் திரைக்கு வரும் என டிரைலரில் அறிவித்துள்ளனர்.

GD Naidu Trailer Out Now Madhavan done a Mindblowing Acting in this big scale Movie
Photo Credit:

ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இந்தியாவின் எடிசன் என போற்றப்பட்ட ஜி.டி. நாயுடுவுக்கு ஆங்கிலேயர்கள் கொடுத்த தொல்லை மற்றும் கடைசி காலத்தில் தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளை தானே அழித்த கதை என அனைத்தையும் டிரைலரில் காட்டியுள்ளனர்.

GD Naidu Trailer Out Now Madhavan done a Mindblowing Acting in this big scale Movie
Photo Credit:

ஜி.டி. நாயுடு டிரைலர் வெளியானது: மாதவனை வைத்து ஏற்கனவே ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தை தயாரித்த அதே தயாரிப்பு நிறுவனம் மீண்டும் மாதவனை வைத்து ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளனர். ஜி.டி. நாயுடுவின் இளமைக் காலம், அவரது கண்டுபிடிப்புகள், அவரது குடும்ப வாழ்க்கை, கடைசி காலத்தில் அவருக்கு ஏற்பட்ட சவால்கள் அவருக்கு இறுதியில் என்ன நேர்ந்தது என அனைத்து விஷயங்களையும் இயக்குநர் நேர்த்தியான திரைக்கதையுடன் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் என்பதை தற்போது வெளியான டிரைலர் தெளிவாக காட்டுகிறது.

ஜி.டி. நாயுடுவாகவே வாழ்ந்த மாதவன்: எந்தவொரு கதாபாத்திரத்தை எடுத்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு எந்தளவுக்கு நேர்த்தியும் நியாயத்தையும் சேர்க்க முடியுமோ அதை அப்படியே செய்யும் மகத்தான நடிகர் மாதவன் இந்த படத்தில் ஜி.டி. நாயுடுவை உலக சினிமா ரசிகர்களுக்கு கண் முன் கொண்டு வந்து நிறுத்த உள்ளார். ஹாலிவுட்டில் கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓபன்ஹெய்மர் படத்துக்கு முன்பாகவே அதற்கு இணையான நம்பி நாராயணின் தி ராக்கெட்ரி படத்தை உருவாக்கி தேசிய விருதையும் வென்ற மாதவன் இந்த படத்தின் மூலம் இன்னொரு தேசிய விருதை வெல்வார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X