அம்மாவே இப்பத்தான் இறந்தாங்க.. ஏங்க இப்படி கிளப்பி விடுறீங்க.. திருமண வதந்தியால் அப்செட்டான பிரபலம்

ஜோடி நம்பர் ஒன், மானாட மயிலாட போல இந்தி ரசிகர்களின் ஃபேவரைட்டான சூப்பர் டான்சர் 4ம் சீசனின் நடுவராக அசத்தி வருகிறார் நடன இயக்குநர் கீதா கபூர். மும்பை: பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநரான கீதா கபூர் தன்னைப் பற்றி சுற்றிய திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஜோடி நம்பர் ஒன், மாநாட மயிலாட போல இந்தி ரசிகர்களின் ஃபேவரைட்டான சூப்பர் டான்சர் 4ம் சீசனின் நடுவராக அசத்தி வருகிறார் நடன இயக்குநர் கீதா கபூர்.

ஷில்பா ஷெட்டி, இயக்குநர் அனுராக் பாசு ஆகியோரும் இந்த போட்டிக்கு நடுவராக இருந்து வருகின்றனர்.

திருமண வதந்தி

திருமண வதந்தி

47 வயதாகும் பிரபல நடன இயக்குநரான கீதா கபூர் இது வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், கீதா கபூரின் புகைப்படம் ஒன்று வைரலாக கீதா கபூர் திருமணம் செய்து கொண்டார் என சமூக வலைதளங்களில் அந்த போட்டோக்களை ரசிகர்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.

நெற்றி வகிடில் பொட்டு

நெற்றி வகிடில் பொட்டு

அந்த போட்டோவில் கீதாவின் நெற்றியில் இருந்த அந்த குங்குமப் பொட்டுத் தான் இப்படியொரு வதந்தி பரவ காரணம். ஆனால், வதந்தி வைரலான நிலையில், தற்போது ஏன் அந்த பொட்டு வைத்தேன் என்றும், திருமணம் ஆகி விட்டதாக பரவும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும் மறுத்துள்ளார் கீதா கபூர்.

அம்மாவே இப்பத்தான் இறந்தாங்க

அம்மாவே இப்பத்தான் இறந்தாங்க

எனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. அப்படியொரு எண்ணமே எனக்கு இதுவரை இருந்ததில்லை. ஒருவேளை திருமணம் செய்து கொள்வதாக இருந்தாலும், அறிவித்து விட்டே திருமணம் செய்து கொள்வேன். என் அம்மாவே சில மாதங்களுக்கு முன்பு தான் இறந்தாங்க.. அந்த சோகத்தில் இருந்தே நான் இன்னும் மீளவில்லை. அதற்குள் இப்படி வதந்திகளை கிளப்பாதீங்க என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended Video

Roja serial Actress Ramya Emotional Post! ஏன் மூலமா அம்மாவுக்கு கொரோனா
குங்குமப் பொட்டு

குங்குமப் பொட்டு

புதிய எபிசோடு ஒன்றுக்காக நடுவர்கள் எல்லாம் பழம்பெரும் நடிகைகளை போல பெர்ஃபார்ம் பண்ணினோம். அதில், நடிகை ரேகாவின் பாடல்களுக்கு நடனமாட அவரை போலவே நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு நடனமாடினேன். அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி உள்ளது என்று விளக்கி உள்ளார்.

அடிக்கடி வைப்பேன்

அடிக்கடி வைப்பேன்

அதுமட்டுமின்றி ஒவ்வொரு திங்கட் கிழமையும் நெற்றி வகிடில் அப்படி பொட்டு வைப்பேன் என்றும், சிவபெருமானை வழிபட்டு வருவதால் அப்படி வைத்து வருகிறேன் என்றும் இதன் காரணமாக நான் திருமணம் செய்து கொண்டேன் என்று நினைக்க வேண்டாம் என்றும் மேலும், வதந்திகள் பரவாமல் இருக்கவும் ஒரே அடியாக விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X