Angammal Public Review: ‘அங்கம்மாள்‘ படம் எப்படி இருக்கு?.. பொதுமக்கள் விமர்சனம்!

சென்னை: விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அங்கமமாள் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படத்தின் பொதுமக்கள் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

பெருமாள் முருகனின் 'கோடித்துணி' என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் அங்கம்மாள். இளம் வயதிலேயே கணவரை இழந்த அங்கம்மாள் (கீதா கைலாசம்), தனது இரண்டு மகன்களை வளர்ப்பதற்காக கடுமையாக வேலைகளை செய்து கஷ்டப்பட்டு அவர்களை படிக்க வைக்கிறாள். கடுமையான உழைப்பாளியாக மட்டுமில்லாமல், தைரியமான பெண்ணாகவும், ஜாக்கெட் அணியாத பழமைவாத பெண்மணியாகவும் இருக்கிறாள்.

Geetha Kailasam Angammal public review

அங்கம்மாள்: இளைய மகன் சரண் நன்றாக படித்து மருத்துவராகி, பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்கிறான். காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கின்றனர். ஆனால்,கீதா கைலாசம், ஜாக்கெட் அணியாமல் இருப்பதால் அவளை தவறாக நினைக்கிறார்கள். இதனால், ஜாக்கெட் அணியும்படி மகனும் நெருக்கடி கொடுக்க கீதா கைலாசம் ஜாக்கெட் அணிந்தாரா? இல்லையா? என்பது தான் அங்கம்மாள் படத்தின் கதை. தியேட்டரில் இன்று இந்த படம் வெளியாகி படம் பார்த்த பொதுமக்களின் விமர்சனத்தை பார்க்கலாம்.

அம்மா, மகன் பாசம்: படம் பார்த்த ரசிகை ஒருவர் படம் பார்ப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. மகன்களுக்காக கஷ்டப்பட்டு வளர்த்த ஒரு தாய் ஜாக்கெட் போடாமல் இருக்கிறார். ஜாக்கெட் போட வேண்டும் என்று மகன் கோரிக்கையாக வைக்கிறான். மகனுக்காக தனக்கு பிடிக்கவில்லை என்றாலும், அந்த தாய் அதை நிறைவேற்றுகிறாள். உடை என்பது பெண்கள் மீது எப்படி திணிக்கப்படுகிறது என்பதை இந்த திரைப்படம் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் அம்மா, மகன் சென்டிமென்ட் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது என்றார்.

இது தான் பெமினிசம்: மற்றொரு ரசிகை, பெமினிசம் என்றால் என்ன என்பது இந்த காலத்தில் பேசி நான் கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால், அந்த காலத்திலேயே ஜாக்கெட் போட்டால் தான் மரியாதை என்று இருக்கும் போது. அப்படிப்பட்ட மரியாதையே எனக்கு தேவையில்லை, நான் சுதந்திரமாக, எனக்கு பிடித்தது போலத் தான் இருப்பேன் என சொல்லி இருக்கும் காட்சி ரசிக்கும் படி இருந்தது என்றார்.

தியேட்டருக்கு போய் பாருங்க: மற்றொரு பெண் இந்த திரைப்படத்தில் சுருட்டு பிடிப்பது போல ஒரு காட்சி வருகிறது. அந்த காட்சியை தவிர்த்து இருக்கலாம். இப்பொழுது வரும் இளம் தலைமுறையினர் அதைப் பார்த்து கற்றுக் கொள்ளக்கூடும். ஆனால், அன்றைய காலக்கட்டத்தில் என்னுடைய பாட்டி சுருட்டு பிடித்ததை நாங்கள் பார்த்தும் இருக்கிறோம் கேள்விப்பட்டும் இருக்கிறோம். மற்றபடி பெண்கள் அனைவரும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய படம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X