ஆபாசப் படம் தயாரித்தாரா? அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் தெரியலை? பிரபல நடிகை தரப்பு காட்டம்!

By

மும்பை: ஆபாச படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை, தொழில் போட்டி காரணமாக பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக அவருடைய டீம் தெரிவித்துள்ளது.

ஹாரர் காமெடி படமான 'பேய்கள் ஜாக்கிரதை' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர், இந்தி நடிகை கெஹனா வசிஸ்த்.

இந்தியில் பல படங்களில் நடித்துள்ள அவர், அங்கும் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.

ஆபாச படங்கள்

ஆபாச படங்கள்

தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், இந்தி டிவி சீரியல்கள் மற்றும் பல வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். மிஸ் ஆசிய பிகினி டைட்டிலை வென்ற கெஹனா, பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். இவர், பணம் கட்டி பார்க்கும் இணையதளம் ஒன்றை தொடங்கி, அதில் ஆபாச படங்களைப் பதிவேற்றி உள்ளார்.

சப்ஸ்கிரைப்

சப்ஸ்கிரைப்

இதற்கு ரூ.2000 கட்டணம் செலுத்தி சந்தாதாரர் ஆகவேண்டும். இதில் ஏராளமானவர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். அவர்களுக்காக சிலருடன் இணைந்து ஆபாச படங்களை தயாரித்துள்ளார். இதுபற்றி போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, மும்பையில் உள்ள மலாட்- மல்வானி பகுதியில் இருக்கும் பங்களா ஒன்றில் சோதனை நடத்தினர்.

கெஹனா வசிஸ்த்

கெஹனா வசிஸ்த்

அப்போது, அங்கு தனி அறையில் ஆபாச படம் எடுப்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகை கெஹனா வசிஸ்த்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த நடிகர்கள், ஒரு பெண் புகைப்படக் கலைஞர், டிசைனர் ஆகியோரையும் கைது செய்தனர். இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.

 87 ஆபாச வீடியோ

87 ஆபாச வீடியோ

நடிகை கெஹனாவிடம் விசாரித்தபோது, அவர் இதுவரை 87 ஆபாச வீடியோக்களை தயாரித்து பதிவேற்றியது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அவர்கள், போலீஸ் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சில ஷாக் தகவல்கள் கிடைத்துள்ளன.

லட்சக் கணக்கில்

லட்சக் கணக்கில்

அவர், கஷ்டப்படும் நடிகர், நடிகைகளை வலையில் வீழ்த்தி, வாய்ப்பு தருவாகக் கூறி, இந்த ஆபாசப்படங்களில் நடிக்க பயன்படுத்தி வந்துள்ளார். அவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை கொடுத்துள்ளார். இந்த ஆபாச வீடியோக்களை பதிவேற்றியதன் மூலம் அவருக்கு லட்சக் கணக்கில் பணம் கிடைத்துள்ளது.

செய்தி தொடர்பாளர்

செய்தி தொடர்பாளர்

அவருடைய மூன்று வங்கி கணக்குகளில் 36 லட்சம் ரூபாய் இருக்கிறது. அந்தப் பணம் பற்றிய விசாரணை நடைபெறுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நடிகை கெஹனா, நிரபராதி என்றும் அவர் ஆபாசப் படம் தயாரிக்கவில்லை என்றும் அவருடைய லீகல் மற்றும் செய்தி தொடர்பாளர் டீம் தெரிவித்துள்ளது.

பொய் குற்றச்சாட்டு

பொய் குற்றச்சாட்டு

சட்டத்துக்கு உட்பட்ட வகையிலான கிளர்ச்சி (Erotica) ஏற்படுத்தக் கூடிய வீடியோக்களை மட்டுமே எடுத்தார் என்றும் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில் ரீதியான போட்டியாளர்களால் அவர் பலிகடா ஆக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த டீம் மேலும் தெரிவித்துள்ளது.

வேறுபாடு இருக்கிறது

வேறுபாடு இருக்கிறது

ஆபாச வீடியோக்களுக்கும் கிளர்ச்சி ஏற்படுத்தக் கூடிய வீடியோக்களுக்கும் சட்டரீதியான வேறுபாடு இருக்கிறது என்றும் உலகின் சிறந்த காவல் துறையான மும்பை போலீஸ் இந்த வித்தியாசம் தெரியாமல் அவரை கைது செய்திருப்பதைக் கண்டு வருத்தமடைவதாகவும் நீதிமன்றத்தின் மூலம் நடிகை கெஹனா நிரபராதி என்பதை நிரூபிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X