ஆபாச பட விவகாரம்.. கைது செய்யாம இருக்க ரூ.15 லட்சத்துக்கு டீல் பேசியதாக கவர்ச்சி நடிகை பகீர்!
மும்பை: ஆபாச பட விவகாரம் தொடர்பாக தன்னை கைது செய்யாமல் விடுவிக்க மும்பை போலீசார் தன்னிடம் 15 லட்சம் ரூபாய்க்கு டீல் பேசியதாக பகீர் குற்றச்சாட்டை நடிகை கெஹனா வசிஸ்த் தெரிவித்து இருப்பது பாலிவுட்டில் மீண்டும் ஒரு புயலை கிளப்பி இருக்கிறது.
ஆபாச படங்களை தயாரித்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த ஜூலை 16ம் தேதி மும்பை குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரது தயாரிப்பில் வெளியான சில ஆபாச படங்களில் நடிகை கெஹனா வசிஸ்த் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயப்படுத்தினார்
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தயாரிப்பாளருமான ராஜ் குந்த்ரா தன்னை கட்டாயப்படுத்தி சில ஆபாச படங்களில் நடிக்க வைத்தார் என ஏற்கனவே நடிகை கெஹனா வசிஸ்த் கொடுத்த புகாரும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ராஜ் குந்த்ராவின் ஹாட் ஷாட் ஆப்பிற்கு சில ஆபாச படங்களை இவர் நடித்து கொடுத்துள்ளார்.

4 மாதம் சிறை
நடிகை கெஹனா வசிஸ்த் 87 ஆபாச படங்களில் நடித்துள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சுமார் 4 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்து பின்னர் ஜாமினில் விடுதலை ஆனார். ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளார் கெஹனா.

ஆபாச படங்கள் இல்லை
தான் நடித்தது எதுவுமே ஆபாச படங்கள் இல்லை என்றும் அவை எரோடிகா எனும் காமப் படங்கள் மட்டுமே என வாதாடி வருகிறார். நடிகை ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரிக்க வில்லை என்றும் அவை கவர்ச்சி படங்கள் மட்டுமே என்றும் வாதிட்டு வருகிறார்.

போலீசுக்கு எதிராக
இந்நிலையில், சமீபத்தில் வட இந்திய மீடியாவுக்கு அவர் அளித்த பேட்டியில் மும்பை போலீசாருக்கு எதிராக பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஆபாச பட விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் தன்னை கைது செய்வதற்கு முன்னதாக போலீசார் தன்னிடம் டீல் பேசினர் எனக் கூறியுள்ளார்.

15 லட்சம் டீல்
அந்த பேட்டியில் அவர் மும்பை போலீசார் தன்னை இந்த விவகாரத்தில் இருந்து விடுவிக்க 15 லட்சம் ரூபாயை லஞ்சமாக கேட்டனர் என பகீர் கிளப்பியுள்ளார். ஆனால், தான் எந்தவொரு தவறும் செய்யவில்லை என மறுத்த நிலையில், எப்படியாவது உன்னை இந்த விவகாரத்தில் சிக்க வைத்து கைது செய்வோம் என மிரட்டினர் என்றார்.

தீவிர முயற்சி
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜூலை 16ம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். நடிகை கெஹனா வசிஸ்த்தையும் இந்த வழக்கில் சிக்க வைக்க மீண்டும் போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கந்திபாத்
2012ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் ஆசிய பிகினி அழகிப் போட்டியில் மகுடம் வென்ற கெஹனா வசிஸ்த் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக களமிறங்கினார். கடந்த 2018ம் ஆண்டு ஆல்ட் பாலாஜியில் வெளியான ஆபாச வெப்சீரிஸ் கந்திபாத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலானார் கெஹனா வசிஸ்த்.


Click it and Unblock the Notifications











