இங்க ஒரே பொம்பளைங்களா இருக்காங்க.. பிக் பாஸில் சொதப்பும் ஜெமினி கணேசன் பேரன்.. ராஜுவை ஏன் தேடுறாரு?

சென்னை: புதிதாக டாஸ்க் ஏதும் தோணவில்லை என்றால் அதே கிராமம் மற்றும் நகரம் செட்டை போட்டு ஒப்பேற்றிவிடும் ஃபார்முலாவை இந்த சீசனிலும் பிக் பாஸ் தவறாமல் கடை பிடித்துள்ளார்.

பிக் பாஸ் வீடு "ஊர விட்டு ஊரு வந்து" என்கிற பெயரோடு நகரம் மற்றும் கிராமமாக இந்த சீசனிலும் பிரிக்கப்பட்டு இருக்கிறது.

கிராமத்து கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட செட்டே ஆகாமல் குரூப்ல டூப்பாக இருக்கும் அபிநய் பேசுவதும் அவரது செயல்களும் நெட்டிசன்களை கலாய்க்க வைத்து வருகிறது.

சுவாரஸ்யமே இல்லை

சுவாரஸ்யமே இல்லை

ஆமாம், தலைவன் அபிஷேக் ராஜாவை வெளியே அனுப்பி விட்டு அபிநய், சின்ன பொண்ணு, மதுமிதா, ஐக்கி பெர்ரி போன்ற போட்டியாளர்களை உள்ளே இன்னமும் வைத்துக் கொண்டிருந்தால் எப்படி சுவாரஸ்யம் வரும் என்றே போட்டியாளர்கள் சுவாரஸ்யமாக விளையாடவில்லை என பிக் பாஸ் சொன்னதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். போன சீசனே பரவாயில்லை என ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களும் புலம்பி வருகின்றனர்.

பெயரை கெடுக்கிறாரா பேரன்

பெயரை கெடுக்கிறாரா பேரன்

நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் பட வாய்ப்புகள் எல்லாம் தனக்கு கிடைக்காமல் மற்ற நடிகர்களுக்கு சென்று விட்டது என புலம்பிய நிலையில், பிக் பாஸ் வாய்ப்பை திறமையாக பயன்படுத்திக் கொண்டு கோலிவுட்டில் பல வாய்ப்புகளை குவிப்பார் என்று பார்த்தால், ஜெமினி கணேசனின் பெயரை கெடுக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

விளாசிய பாவனி

விளாசிய பாவனி

பாவனி தன்னிடம் வந்து பேசுகிறாரே என நினைத்துக் கொண்டு அவர் பின்னாலே குட்டிப் போட்ட பூனையாக திரிந்து கொண்டிருந்த அபிநய் வருண் பற்றி பாவனியிடம் பற்ற வைக்க மூஞ்சிக்கு நேரா பேசுங்க, பின்னாடி பேசாதீங்க என அபிநய்யை பாவனி வச்சு விளாசி விட்டார்.

டாஸ்க்கிலும் தோல்வி

டாஸ்க்கிலும் தோல்வி

டாஸ்க் கொடுத்தாலாவது மனுஷன் இறங்கி கேம் ஆடுவார் என பார்த்தால், இதுவரை அதிலும் சொதப்பல் தான். நேற்று நிரூப்பிடம் மெழுகுவர்த்தி கொளுத்தும் போட்டியில் கூட படு தோல்வி அடைந்து விட்டார். இவர் இன்னும் ஏன் இவர் வீட்டில் இருக்கிறார் என்றே நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரட் மேட்டர்

பிரட் மேட்டர்

அக்‌ஷரா ரெட்டியும் ஐக்கி பெர்ரியும் பக்காவாக பிளான் போட்டு வெறுப்பேற்றியவர்களை பழி வாங்க வேண்டும் என பிரட் பாக்கெட்டை மறைத்து வைக்க இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. தாமரை செல்விக்கு விஷயம் தெரியாமல் எங்காளுங்க எதையும் திருட மாட்டாங்க என நகரத்து மக்களான வருண், பிரியங்கா உள்ளிட்டோரிடம் வாக்குவாதம் செய்து வந்தார்.

பொம்பளைங்களா இருக்காங்க

பொம்பளைங்களா இருக்காங்க

ஆனால், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அபிநய் அந்த இடத்தை பயன்படுத்தி ஸ்கோர் பண்ணாமல் ஒரே பொம்பளைங்களா இருக்காங்க.. ராஜு எங்கடா போன என ராஜு பாயை தேடி புலம்பியதை பார்த்த நெட்டிசன்கள் அபிநய்யை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

கடைசியில் அபிநய்

கடைசியில் அபிநய்

இந்த வாரம் சின்ன பொண்ணு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தாலும், அபிநய் தான் கருத்துக் கணிப்பில் குறைவான வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அபிநய் அல்லது சின்ன பொண்ணு இருவரில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X