இந்த அடக்க ஒடுக்கம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...கிரணை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
சென்னை:சீயான் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் பால் கொழுக்கட்டைப் போல அழகு பதுமையாக இருந்தவர் தான் நடிகை கிரண். அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாந்த்துடன் வின்னர், கமலுடன் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு படவாய்ப்பு இல்லாததால் இணையத்தை திணறவிட்டு வருகிறார். தற்போது அவர் அப்லோடு செய்துள்ள போட்டோவிற்கு லைக்குகள் மலை போல் குவிந்து வருகிறது.
கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் படத்தில் பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் பாடலில் வரும் ஓவியம் போல ஆழகாக இருந்தார் நடிகை கிரண். இவர் நடித்த அனைத்தும் படங்களும் வசூலை குவித்த நிலையிலும் இவருக்கு படவாய்ப்பு இல்லை. இதையடுத்து, விஜய் நடித்த திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ஐட்டம் பாடலுக்கு ஆட ரெடி என பச்சைக்கொடி காட்டினார்.

நடிகை கிரண்: அதன் பிறகும் படவாய்ப்பு இல்லாததால், பாலிவுட், டோலிவுட் என அலைந்து அலுத்துப்போனார். இதையடுத்து, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்துனகத்திரிக்காய் படத்தில் அம்மா ரோலில் நடித்திருந்தார். மேலும், விஷாலுடன் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். பட வாய்ப்பு வரவேண்டும் என்றால் கவர்ச்சி காட்டியே ஆகவேண்டும் என அந்த படத்தில் ஓவர் கவர்ச்சி காட்டினார். ஆனால் அண்மையில் அவர் அளித்த பேட்டியில் ஆம்பள படத்தில் நான் நடித்தது தான் நான் செய்த பெரிய தவறு, சுந்தர் சிக்காகத்தான் அந்த படத்தில் நடித்தேன் என்று கூறினார்.

கவர்ச்சி ரூட்: நடிகை கிரணுக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக படவாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை. படவாய்ப்பு இல்லை என்றால் என்ன இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பணத்தை அள்ளினார். வருமானமே இல்லாமல் இன்ஸ்டாவை நம்பி பொழப்பு நடத்தி வந்த கிரண் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்தார். இதனால் தெலுங்கு ரசிகர்கள் குஷியானாலும், ஆனால், போன வேகத்திலேயே திரும்பி வந்தார்.

அடக்க ஒடுக்கமாக: பிக் பாஸ் நிகழ்ச்சியை பெரிதும் நம்பி இருந்த கிரணுக்கு அதுவும் கை மீறி போனதால், என்ன செய்வது என்று தெரியாமல், மீண்டும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து அதகளப்படுத்தி வருகிறார். இவர் பதிவிடும் கவர்ச்சி போட்டோவிற்கு லைக்குகள் குவிந்தாலும் சிலர் இவரை திட்டி வருகின்றனர். ஆனால், தற்போது இவர் கோவா கடற்கரையில் கவர்ச்சியே இல்லாமல், உடலை மூடிய உடையில் போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த பேன்ஸ் இந்த அடக்க ஒடுக்கம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அவரை கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











