ஒரு கையில் சரக்கு.. இன்னொரு கையில் கிளாஸ்.. அளவு பார்த்து ஊற்றி குடிக்கும் கிரண்!

சென்னை: நடிகை கிரண் இன்ஸ்டாகிராமில் சரக்கு பாட்டிலுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்து வந்தவர் தான் நடிகை கிரண். இவர் அஜீத், விக்ரம், கமல் ஹாசன் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி போட்டு நடித்து உள்ளார்.

Gemini movie heroine kiran instagram post treinding on social media

சீயான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் செதுக்கி வைத்த தங்கசிலை போல இருந்தவர் இப்போது அடையளமே தெரியாத அளவிற்கு மாறி உள்ளார்.

நடிகை கிரண்: ஜெமினி, வின்னர்,அன்பே சிவம் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.இந்த படங்கள் அனைத்தும் வசூலை குவித்த நிலையிலும் இவருக்கு படவாய்ப்பு இல்லை. இதையடுத்து, விஜய் நடத்த திருமலை படத்தில் "வாடியம்மா ஜக்கம்மா" என்ற ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு மொத்த இமேஜையும் கெடுத்துக்கொண்டார். அதன்பிறகு இவருக்கு படவாய்ப்பே வரவில்லை.

Gemini movie heroine kiran instagram post treinding on social media

கவர்ச்சி நடிகை: தமிழில் படவாய்ப்பு இல்லாததால், பாலிவுட், டோலிவுட் பல ஊர்களில் சுற்றினார். ஆனால், வாய்ப்பு கிடைக்காததால் நொந்துப்போன கிரண், வருமானத்திற்காக கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்தார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்துனகத்திரிக்காய் படத்தில் அம்மா ரோலில் நடித்திருந்தார். மேலும், விஷாலுடன் ஆம்பள படத்தில் ஆண்டி ரோலில் நடித்திருந்தார்.

கையில் சரக்கு: பட வாய்ப்பு வரவேண்டும் என்றால் கவர்ச்சி காட்டியே ஆகவேண்டும் என்று இணையத்தில் ரசிகர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு படுமோசமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது, இவர் கவர்ச்சியான உடையில், ஒரு கையில் சரக்கு பாட்டிலையும், மறு கையில் கிளாஸையும் வைத்துக்கொண்டு , நிபுணா நிபுணா என்ற பாட்டுக்கு ரீல்ஸ் போட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் காலையிலே சரக்கா என்றும், நீங்க திருந்த மாட்டீங்க என்று திட்டி வருகின்றனர்.

வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ்: நேற்று இவர் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. புதிய இயக்குநர், புது கதை, புது கதாபாத்திரம் உள்ளிட்டவற்றில் நடிக்க தயாராக இருக்கிறேன். இன்னும் அதே நம்பர் தான் வைத்து இருக்கிறேன் கால் செய்து என்னை மீட் பண்ணலாம், கதை சொல்லலாம், வேலைக்கு மட்டும் போன் செய்யுங்கள், டின்னர் சாப்பிட போன் செய்ய வேண்டாம் என்று பதிவிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X