twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராமானுஜன் வாழ்க்கை படமாகிறது.... ஜெமினி - சாவித்திரி பேரன் அபினய் நடிக்கிறார்

    By Shankar
    |

    சென்னை: கணித மேதை என்று புகழப்பட்ட ராமானுஜன் வாழ்க்கையை 'ராமானுஜன்' என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திரைப்படமாக உருவாக்கி வருகிறார் ஞான ராஜசேகரன்.

    ஜெமினி - சாவித்திரி பேரன்

    ஜெமினி - சாவித்திரி பேரன்

    கேம்பர் சினிமா என்ற நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஜெமினி, சாவித்திரி தம்பதிகளின் பேரன் அபினய் வட்டி ராமானுஜனாக நடிக்கிறார்.

    கேம்பிரிட்ஜில்

    கேம்பிரிட்ஜில்

    பாமா அவரது மனைவியாகவும், சுஹாசினி அவரது தாயாராகவும் நடிக்கிறார்கள். ராமானுஜர் வாழ்ந்த ஈரோடு, கும்பகோணம், சென்னை, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ஆகியவற்றில் படப்பிடிப்பு நடந்தது. லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழத்தில் படமாக்கப்பட்ட ஒரே படம் ராமானுஜன்தான்.

    ராமானுஜன் பட கேலரி

    ராமானுஜன் வாழ்க்கை

    ராமானுஜன் வாழ்க்கை

    இது குறித்து இப்படத்தின் இயக்குனர் ஞான ராஜசேகரன் கூறுகையில், "ராமானுனது சிறு வயது முதலே அவரது கணிதத்திறன் அபாரமானதாக இருந்தது. ஆனால், அவரது திறமையை கொண்டாடவில்லை.

    ஜிஎச் ஹார்டி

    ஜிஎச் ஹார்டி

    இந்த சமூகமும், கல்வி நிலையங்களும் அவரை அங்கீகரிக்காமல், அவரை கஷ்டப்பட வைத்தன. அவர், தன வாழ் நாள் முழுவதும் தனது புலமையை ஒரு சிலுவையை சுமப்பது போல சுமந்தார். ஆனால் அவரையும் அடையாளம் காட்டியது ஜி.எச் ஹார்டி என்ற ஆங்கில பேராசிரியர். அவர்தான் ராமானுஜரின் கணித கண்டுபிடிப்புகளை உலகக்கு காட்டியவர்.

    பைத்தியமாக்குகிறோம்

    பைத்தியமாக்குகிறோம்

    இதுதான் என்னை அவரைக் குறித்து படமெடுக்க வைத்தது. ராமானுஜனின் வாழ்க்கை இன்றைய சமூகத்துக்கும் பொருத்தமானதாகும். நமது அறிவிஜீவிகளை நாம் எப்படி நடத்துகிறோம், நாம் அவர்களை புரிந்து கொள்கிறோமா அல்லது அவர்களை ஏழ்மையில் தள்ளி, கஷ்டப்படுத்தி, பைத்தியமாக்குகிறொமா? ராமானுஜனின் வாழ்க்கை இதற்காக பதிலைத் தரும்," என்றார்.

    கோடை விடுமுறையில்

    கோடை விடுமுறையில்

    இயக்குநர் ஞான ராஜசேகரன் ஏற்கெனவே பாரதி, பெரியார், மோக முள் போன்ற படங்களை இயக்கியவர். இந்த கோடை விடுமுறையில் வெளியாகிறது படம். ஆனால் சென்சார் முடிந்து ஏற்கெனவே தேசிய விருதுக்கு ஒரு பிரதியை அனுப்பி வைத்துவிட்டார் ஞான ராஜசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Gnana Rajasekaran, Director of Bharathi and Periyar is now making a film on the rela life history of Ramanujan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X