For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொண்டாட்டியை பக்கத்தில வச்சிக்கிட்டே பிரபல நடிகைக்கு முத்தம்.. புருஷனை புரட்டி எடுத்த ஜெனிலியா!

    |

    மும்பை: சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் பார்த்த ஹாசினி போலவே இப்போதும் குறும்புத் தனமாக இருக்கிறார் நடிகை ஜெனிலியா.

    பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ் முக்கை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டாலும், சமூக வலைதளங்கள் மூலம் இன்னமும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் ஜெனிலியா.

    இந்நிலையில், நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு முத்தம் கொடுத்த கணவருக்கு வீட்டுக்கு வந்ததும் என்ன நேர்ந்தது என்பதை வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

    குறும்புத் தனம்

    குறும்புத் தனம்

    2003ம் ஆண்டு இந்தியில் துஜே மேரி கசாம், தமிழில் பாய்ஸ் மற்றும் தெலுங்கில் சத்யம் உள்ளிட்ட படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமப்புத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார். சந்தோஷ் சுப்பிரமணியத்தில் குறும்பு பெண் ஹாசினியாக நடித்த ஜெனிலியாவை ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

    பாலிவுட் நடிகருடன் திருமணம்

    பாலிவுட் நடிகருடன் திருமணம்

    2012ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்ட ஜெனிலியா அதற்கு பிறகு சினிமாவில் நாயகியாக நடிப்பதில்லை. சில பாலிவுட் படங்களில் அவ்வப் போது கெஸ்ட் ரோலில் வந்து செல்கிறார். ரித்தேஷ் - ஜெனிலியா தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    ப்ரீத்தி ஜிந்தாவுக்கு முத்தம்

    ப்ரீத்தி ஜிந்தாவுக்கு முத்தம்

    இந்நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு விழா ஒன்றில் கன்னத்தை உரசி, கைகளில் ரித்தேஷ் முத்தம் கொடுப்பதை அருகில் சிரித்துக் கொண்டே ஜெனிலியா பார்க்கும் வீடியோவை இப்போ லேட்டஸ்ட்டாக எடிட் செய்து வீட்டுக்கு வந்த பிறகு என்ன ஆச்சுன்னு பாருங்க என காமெடியாக வெளியிட்டு இருக்கும் கும்மாங்குத்து வீடியோ வைரலாகி வருகிறது.

    கும்மாங்குத்து வீடியோ

    பொண்டாட்டியை பக்கத்தில் வைத்துக் கொண்டே ப்ரீத்தி ஜிந்தாவுக்கு முத்தம் கொடுப்பியான்னு கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கை நடிகை ஜெனிலியா கும்மாங்குத்து குத்துவது போல எடிட் செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவை வெளியிட்டு பாலிவுட் பிரபலங்களையும் ரசிகர்களையும் சிரிக்க வைத்துள்ளார் ஜெனிலியா.

    4 மணி நேரத்தில்

    4 மணி நேரத்தில்

    நடிகை ஜெனிலியா இந்த வீடியோவை வெளியிட்ட 4 மணி நேரத்தில் 4.75 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன. மேலும், ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்களும் ஜெனிலியாவின் மாறாத குறும்புத்தனத்தை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் 4.6 மில்லியன் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Genelia attacks her husband Ritesh Deshmukh for kissing Preity Zinta in a throwback video. Genelia hilariously posted a video and makes it viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X