கணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ!

By

மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள பெட்ரூம் வீடியோ வைரலாகி வருகிறது. கணவர் அவருக்கு கொடுக்கும் முத்தம் அதில் இடம்பெற்றுள்ளது.

தமிழில், பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா.

மும்பையை சேர்ந்த இவர், ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ரிதேஷ் தேஷ்முக்

ரிதேஷ் தேஷ்முக்

இவர், பிரபல இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் கடந்த 2012 ஆம் ஆண்டு மும்பையில் நடந்தது. இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை ஜெனிலியா நிறுத்தி இருக்கிறார்.

கெஸ்ட் ரோல்

கெஸ்ட் ரோல்

சில இந்தி படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். கடைசியாக இந்தியில் 2012 ஆம் ஆண்டு வெளியான, தேரே நால் லவ் ஹோ ஹயா என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் நடிப்பதற்கு மீண்டும் தயாராக இருப்பதாகக் கூறினார்.

Recommended Video

Couple Quarantine | Sayyeesha Cup cakes | Genelia | Mahat Prachi
கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

சில மாதங்களுக்கு முன் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 15 நாள் தனிமை சிகிச்சைக்குப் பின் அதில் இருந்து மீண்டு வந்தார். கொரோனாவால் தான் எப்படிப் பட்ட கஷ்டங்களை அனுபவித்தேன் என்றும் அவர் அளித்த பேட்டியில் விளக்கமாகக் கூறியிருந்தார்.

கன்னத்தில் முத்தம்

இப்போது அவர் தனது கணவருடன் பெட்ரூமில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணடிக்கும் அவருக்கு கணவர் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார், ரிதேஷ். இதற்கு கேப்ஷனாக, எப்போதும் தொடரும் காதல் என்று
கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடரட்டும் ரொமான்ஸ்

தொடரட்டும் ரொமான்ஸ்

பாலிவுட் பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகை ரகுல் பிரீத் சிங், தியா மிர்ஸா உட்பட பலர் ஹார்ட் எமோஜியை பகிர்ந்துள்ளனர். இரண்டு பேரும் சிறந்த ஜோடி, கடவுள் அருள் புரியட்டும் என்று பலர் தெரிவித்துள்ளனர். ரொமான்ஸ் தொடரட்டும் என்று பல நெட்டிசன்ஸ்களும் சினிமாவுல பார்க்கிற மாதிரியே இருக்கே என்று சிலரும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X