நாங்க நடிகர்கள்னே எங்க குழந்தைகளுக்கு இன்னும் தெரியாது.. பிரபல நட்சத்திர தம்பதி தகவல்!

By

மும்பை: நானும் என் கணவரும் நடிகர் என்பது என் குழந்தைகளுக்கு இன்னும் தெரியாது என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழில், பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா.

மும்பையை சேர்ந்த இவர், ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ரிதேஷ் தேஷ்முக்

ரிதேஷ் தேஷ்முக்

இவர், பிரபல இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் கடந்த 2012 ஆம் ஆண்டு மும்பையில் நடந்தது. இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை ஜெனிலியா நிறுத்தி இருக்கிறார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

சில இந்தி படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 15 நாள் தனிமை சிகிச்சைக்குப் பின் அதில் இருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் ஜெனிலியாவும் அவர் கணவரும் அளித்த பேட்டியில், தங்கள் குழந்தைகள் பற்றி கூறியுள்ளனர்.

வேலை பார்க்கிறாங்க?

வேலை பார்க்கிறாங்க?

ஜெனிலியா, 'நாங்கள் நடிகர்கள் என்பது எங்கள் குழந்தைகளுக்கு இன்னும் தெரியவில்லை என நினைக்கிறேன். அவர்கள் அடிக்கடி, அப்பா எங்க வேலை பார்க்க போறாங்க? ஆபீஸா? என்று கேட்கிறார்கள். ஆனால், ஷூட்டிங்கிற்கு அவர்களை அழைத்துச் சென்றால், அங்கு அவர்களுக்கு நாங்கள் தேவையில்லை.

டோட்டல் தமால்

டோட்டல் தமால்

யாருடனும் ஒட்டிக் கொள்வார்கள், நன்றாக பொழுதை போக்குவார்கள் என்கிறார் ஜெனிலியா. அவர் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் கூறும்போது, 'நான் நடித்த படங்கள் எதையும் அவர்கள் பார்த்ததில்லை. சமீபத்தில் டோட்டல் தமால் படத்தைப் பார்த்தார்கள். அவர்கள், ஒவ்வொரு பெற்றோரும் நடிப்பு வேலையை செய்வார்கள் என நினைக்கிறார்கள்.

போறேன்னு சொல்றீங்க?

போறேன்னு சொல்றீங்க?

ஒரு நாள், ஷூட்டிங்கிற்கு அழைத்துச் சென்றேன். அப்போது, அப்பா நீங்க வேலைக்கு போறேன்னு சொல்றீங்க. ஆனா, இங்க நடனமாடிட்டு இருக்கீங்க? என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள் என்றார். கொரோனா பாதித்தபோது எப்படி உணர்ந்தீர்கள் என ஜெனிலியாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

தடுமாறி விட்டேன்

தடுமாறி விட்டேன்

அது குழந்தைகளுக்கும் ரிதேஷுக்கு கஷ்டமாக இருந்திருக்கும். திடீரென்று தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டபோது தடுமாறி விட்டேன். அதற்கு தயாராவதற்கு கூட நேரமில்லை. என் பெற்றோர் குழந்தைகளுக்கு உதவியாக இருந்தனர். ஒவ்வொரு மணி நேரமும் குடும்பத்தினரும் நண்பர்களும் அழைத்து விசாரித்தார்கள்.

மகிழ்ச்சி மனைவி

மகிழ்ச்சி மனைவி

அது ஆதரவாக இருந்தது. நம்பிக்கை அளித்தது. இவ்வாறு ஜெனிலியா தெரிவித்துள்ளார். கணவர் ரிதேஷ் பற்றி கேட்டபோது, அவருக்கு தெரியும் மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X