பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு கொரோனா பாதிப்பு.. 'நோய்க்கான போராட்டம் எளிது.. தனிமைதான் கடும் சவால்'!
மும்பை: தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்றும் அதில் இருந்து மீண்டும் விட்டேன் என்றும் பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழில், பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் உட்பட பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா.
மும்பையை சேர்ந்த இவர், ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ரிதேஷ் தேஷ்முக்
பிரபல இந்தி நடிகரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு ஜெனிலியா நடிப்பதை நிறுத்தி விட்டார்.

கொரோனா பாதிப்பு
சில இந்தி படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்நிலையில், அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த மூன்று வாரங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். பாசிட்டிவ் என்று இருந்ததால் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

தனிமையில் இருப்பது
இந்த நோயுடனான என் போராட்டம் எளிதாகவே இருந்தது. ஆனால், கடந்த 21 நாட்களாக தனிமையில் இருப்பது சவாலானதாக அமைந்தது. என் குடும்பத்துடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் அன்போடு இருங்கள். அதுதான் உண்மையான பலம். அனைவருக்கும் அதுதான் தேவையும் கூட.

அரக்கனை எதிர்க்க
முன்னதாகவே பரிசோதனை செய்து கொள்ளுங்கள், ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுங்கள், பிட்டாக இருங்கள். இந்த அரக்கனை எதிர்த்து போராட இது ஒன்றே வழி. இவ்வாறு நடிகை ஜெனிலியா கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பாதுகாப்பாக இருங்கள் என்றும் பல நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

ஐஸ்வர்யா ராய்
கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. அது பிரபலங்களையும் விடுவதில்லை. நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகை நிக்கி கல்ராணி, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











