ஜெயம் ரவியின் பெற்றோர்களை பார்த்து 'ஹவ் க்யூட்'னு சொன்ன ஹாசினி.. ரிப்ளை போட்ட ராஜ ராஜ சோழன்!
சென்னை: இயக்குநர் மோகன் ராஜா பதிவிட்ட போஸ்டரை பார்த்து நடிகை ஜெனிலியா போட்ட ட்வீட்டும் அதற்கு ஜெயம் ரவி போட்ட கமெண்ட்டும் மீண்டும் ரசிகர்களை சந்தோஷ் சுப்பிரமணியம் படம் வெளியான காலகட்டத்திற்கே அழைத்துச் சென்று விட்டது.
ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், காட்ஃபாதர் மூலம் அண்ணன் மோகன் ராஜாவும் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டு வருகிறார்.
மகன்கள் இருவரும் சினிமா உலகை ஆள்வதை பார்த்து எடிட்டர் மோகன் மற்றும் அவரது மனைவியும் சந்தோஷத்தில் தியேட்டரில் கொடுத்த க்யூட் போஸ் புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவி
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். போர்க் காட்சிகள் முதல், யானை மீது ஏறி சவாரி செய்யும் காட்சிகள் மற்றும் வந்தியத்தேவன் உடன் சண்டை செய்யும் காட்சி, கடைசியாக வந்தியத்தேவனை காப்பாற்ற கப்பலில் பாண்டிய ஆபத்துதவிகளுடன் சண்டை போடும் காட்சி என அருள்மொழி வர்மனை அப்படியே திரையில் காட்டி உள்ளார். ராஜ ராஜ சோழன் என்கிற டைட்டிலில் தனியாக ஒரு ஸ்பின் ஆஃப் படம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பெருமைக்குரிய பெற்றோர்கள்
தம்பி ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் என்றால், அண்ணன் மோகன் ராஜா சிரஞ்சீவி, சல்மான் கானை வைத்து காட்ஃபாதர் படத்தை எடுத்து 3 நாட்களில் 100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், பொன்னியின் செல்வன் மற்றும் காட்ஃபாதர் படங்களின் போஸ்டருக்கு அருகே எடிட்டர் மோகன் மற்றும் அவரது மனைவி நிற்கும் புகைப்படத்தை மோகன் ராஜா ஷேர் செய்து Proud parents என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஜெனிலியா ஹேப்பி
இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை ஜெனிலியா How Cute என ஹார்ட்டீன்களை பறக்கவிட்டு, ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் சந்தோஷ் சுப்பிரமணியம் பார்ட் 2 எடுங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அருண்மொழி வர்மன் ட்வீட்
ட்விட்டரில் இன்னமும் அருண்மொழி வர்மன் என்கிற பெயரை மாற்றாமல் உள்ள நடிகர் ஜெயம் ரவி, ஜெனிலியாவின் ட்வீட்டை பார்த்தும் ஹேப்பியான நிலையில், தேங்க்யூ ஜென்னி என கமெண்ட் போட்டுள்ளார். பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனித்து வரும் நடிகை ஜெனிலியா தனது பழைய நண்பர்களை மறக்காமல் வாழ்த்தி இருப்பதை பார்த்து ரசிகர்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











