ஜார்ஜியாவா? ஹைதராபாத்தா? எங்கே இருக்கிறார் பூஜா ஹெக்டே.. வைரலான போட்டோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
சென்னை: தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கி உள்ளது. சைக்கிளில் செம மாஸாக வந்து ஓட்டுப் போட்டு இந்தியளவில் டிரெண்டான விஜய், அடுத்த நாளே ஜார்ஜியாவுக்கு பறந்து விட்டார்.
Recommended Video
மும்பை விமான நிலையத்தில் பூஜா ஹெக்டேவை பார்த்த ரசிகர்கள், பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியாவுக்குத் தான் செல்கிறார் என போட்டோக்களை வைரலாக்கினர்.
ஆனால், ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்புக்குத் தான் பூஜா ஹெக்டே சென்றுள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருவதால், ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியளவில் டிரெண்டிங்
ஏப்ரல் 6ம் தேதி நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச் சாவடிக்கு சைக்கிள் ஓட்டிச் சென்று ஓட்டுப் போட்ட தளபதி விஜய்யின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இந்தியளவில் டிரெண்டாகின. ஓட்டுப் போட்ட கையோடு உடனடியாக தளபதி 65 படப்பிடிப்புக்காக வெளிநாட்டிற்கும் பறந்து விட்டார்.

ஜார்ஜியாவில் படப்பிடிப்பு
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜார்ஜியாவுக்கு செல்லும் போட்டோக்களும் இணையத்தில் டிரெண்டாகின.

ஏர்போர்ட்டில் பூஜா ஹெக்டே
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில், ஒயிட் கலர் டாப்ஸ் மற்றும் ப்ளூ கலர் குட்டி ஜீன்ஸ் அணிந்து கொண்டு பரபரப்பாக கிளம்பிய பூஜா ஹெக்டேவின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தளபதி 65 படத்தின் படப்பிடிப்புக்காகத் தான் பூஜா ஹெக்டே ஜார்ஜியா செல்கிறார் என்றும் தகவல்கள் பரவின.

குழப்பத்தில் ரசிகர்கள்
ஆனால், பூஜா ஹெக்டே ஜார்ஜியா செல்லவில்லை என்றும் ஹைதராபாத்தில் நடக்கும் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் தான் சென்றார் என்றும் சில தகவல்கள் பரவிய நிலையில், பூஜா ஹெக்டே எங்கே சென்றார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பித் தவித்து வருகின்றனர்.

பூஜா சொல்லவில்லை
விமானத்தில் பயணிக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட பூஜா ஹெக்டே எங்கே செல்கிறேன் என்றும் எந்த படத்தின் படப்பிடிப்புக்கு போகிறேன் என்றும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. ஜார்ஜியாவில் 15 நாட்களுக்கு நடைபெறும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்பது விரைவில் தெரியவரும் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றன.


Click it and Unblock the Notifications











