புகார் அளித்ததால் நடிகர் ஆர்யா தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுகிறார்.அதிர வைக்கும் ஜெர்மனி பெண்!
சென்னை: புகார் அளித்ததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நடிகர் ஆர்யா மிரட்டுகிறார் என ஜெர்மனி பெண் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 80 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த விட்ஜா என்ற அந்த பெண், ஜெர்மனி நாட்டின் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார்.

ஆன்லைன் மூலம் புகார்
நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு, திருமணம் செய்யாமல் ஏமாற்றியது தொடர்பாக பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.

80 லட்சம் ரூபாய் பணம்
லாக்டவுன் நேரத்தில் கையில் படம் இல்லாததால் பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறிய ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறினார் என்றும் விட்ஜா கூறியுள்ளார். இதுவரை ஆர்யாவுக்கு 70 லட்சத்து 40000 ரூபாய் பணம் வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆர்யாவின் தாயார்..
பணத்தை பெற்றுக் கொண்ட ஆர்யா தன்னை திருமணம் செய்ய மறுத்ததுடன் தனது பணத்தையும் கொடுக்க மறுக்கிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் பணத்தை திருப்பி கேட்டதற்கு ஆர்யாவின் தாயார் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சகம் தலையீடு
பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் அளித்த புகாரில் இந்த ஆவணங்களையும் இணைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் தலையிட்டுள்ளது.

ஆர்யா மிரட்டுகிறார்
இதனிடையே புகார் அளித்ததால் நடிகர் ஆர்யா, தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுவதாகவும் விட்ஜா கூறியுள்ளார். மேலும் ஆர்யா என்ன மிரட்டினாலும் தனது புகாரை வாபஸ் பெறப்போவதில்லை என்றும் விட்ஜா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

வேதனைக்கு அளவே இல்லை
கடந்த சில ஆண்டுகளாக தான் பட்ட வேதனைக்கு அளவே இல்லை என்று கூறியுள்ள விட்ஜா, தனக்கு நீதி கிடைக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

விரைவில் நடவடிக்கை
உள்துறை அமைச்சக செயலாளர் கோபால் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு அதிகாரி சரவணவேல் ஐஏஎஸுக்கு தனது புகாரை அனுப்பி வைத்துள்ளதாகவும் விட்ஜா தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











