வெட்டிபயளுக தான் அடுத்தவர்களை கலாய்க்கிறாங்க: நடிகை காட்டம்
மும்பை: வேலை வெட்டி இல்லாதவர்கள் தான் அடுத்தவர்களை கிண்டல் செய்வதாக நடிகை இஷா குப்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை இஷா குப்தா டாப்லெஸ் புகைப்படம் மற்றும் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்தனர்.
இதையடுத்து இது குறித்து இஷா கூறியிருப்பதாவது,

வெட்டிப்பய
வேலை எதுவும் இல்லாமல் இருப்பவர்கள் தான் அடுத்தவர்களை ஆன்லைனில் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் ஆன்லைனில் நேரத்தை கழிக்கிறார்கள்.

சாதாரணமானவர்கள்
ஆன்லைனில் வந்தால் பிரபலங்களை மட்டும் அல்ல யாராக இருந்தாலும் கிண்டல் செய்கிறார்கள், விமர்சிக்கிறார்கள். ஒன்னுமில்லாதவர்களின் கருத்தை மதித்தால் அது என் தவறாகிவிடும்.

கடவுள்
கடவுளின் அருளால் பெயரும், புகழும் கிடைத்தால் படங்களை விளம்பரம் செய்வதை தவிர நாம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

நபர்கள்
கருத்தை தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் கலாய்ப்பவர்கள் எதை வேண்டுமானாலும் கலாய்ப்பார்கள். அவர்கள் உருப்படியாக ஏதாவது வேலை செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார் இஷா.


Click it and Unblock the Notifications











