காலண்டரில் 12ம் தேதியை குறிச்சு வச்சுக்கோங்க: தண்டல்காரன்(சூர்யா) வரான்
சென்னை: என்.ஜி.கே. படத்தின் முதல் பாடலின் தலைப்பு தண்டல்காரன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே. படம் ஒருவழியாக மே மாதம் 31ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதாவது யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒவ்வொரு பாடலாக வெளியிடப்பட உள்ளது. முதல் பாடலின் தலைப்பு தண்டல்காரன் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.
தண்டல்காரன் பாடல் வரும் 12ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. ஏதாவது அப்டேட் கிடைக்காதா என்று ஏங்கிய சூர்யா ரசிகர்களுக்கு இந்த அப்டேட் பெருமகிழ்ச்சி அளித்துள்ளது.
தலைப்பு வெளியிடப்பட்ட வேகத்தில் அதை ட்விட்டரில் டிரெண்டாக விட்டுவிட்டனர் ரசிகர்கள். பாட்டின் தலைப்புக்கே இப்படி என்றால் பாடல் வந்தால் நிச்சயம் புதிய சாதனை படைக்க வைத்துவிடுவார்கள்.
இந்நிலையில் சூர்யா ரசிகர் ஒருவர் என்.ஜி.கே. டீசரை ஓவியமாக வரைந்துள்ளார், அது மிகவும் அழகாக உள்ளது. நீங்கள் பாருங்க.


Click it and Unblock the Notifications











