Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கப்போட வாங்க ஆரி.. அட்டகாசமாக வாழ்த்திய அனிதா.. பிக் பாஸ் வீட்டுக்கு முத்தமிட்ட சனம் ஷெட்டி!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து அனிதா சம்பத் வெளியேறும் போது, கப்போட வாங்க ஆரி என அட்டகாசமாக வாழ்த்தினார்.
சனம் ஷெட்டியும், ஆரிக்கு தனது ஆதரவை கொடுத்து விட்டு சென்றார். அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ரேகா எல்லாம் ரியோ, சோமுக்கு வாழ்த்து கூறினர்.
'வில்லனோ, ஹீரோவோ..நீங்க வேற லெவல்ஜி' விஜய் சேதுபதி பிறந்தநாள்.. கொண்டாடும் ரசிகர்கள்!
சம்யுக்தா, ஆஜீத், ஷிவானி ரம்யாவுக்கும், சம்யுக்தா, அர்ச்சனா பாலாவுக்கும் வாழ்த்து சொல்லி வெளியேறினார்கள்.
ஓய்ந்தது இரைச்சல் சத்தம்
இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியே ரசிகர்களுக்கு ஒய் பிளட் சேம் பிளட் என்பது போலத் தான் இருந்தது. வெளியே போனவர்கள் மீண்டும் வருகிறார்கள் என்றதும் ஹேப்பியாக வேண்டிய ரசிகர்கள் அதற்கு மாறாக ரொம்பவே அப்செட் தான் ஆனார்கள். இந்நிலையில், நேற்று அனைவரும் வெளியேறியதும் பிக் பாஸ் வீட்டில் இரைச்சல் சத்தம் ஓய்ந்தது.
கண்ணீர் ஏவி
நேற்று முன் தினம் சண்டை ஏவி போட்டு அனைவரையும் நடுங்க வைத்த பிக் பாஸ் குழு, நேற்று கண்ணீர் ஏவி போட்டு ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களையும் உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. அர்ச்சனாவும், ரியோவும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தனியாக அழுது கொண்டே இருந்தனர். அந்த ஏவி முடிந்ததும் அனிதா சம்பத் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்.
பாலாவுக்கு முத்தம்
ரியோ மற்றும் சோமுக்கு வெற்றி பெற வாழ்த்துக் கூறிய அர்ச்சனா பாலாவை கட்டிப்பிடித்து அழுது முத்தம் கொடுத்து விட்டு சென்றார். உண்மையாகவே யார் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என அர்ச்சனா நினைக்கிறார் என்பதே தெரியவில்லை. ஆனால், கடைசி வரை ஆரி பக்கமே போகவில்லை.
கப்போட வாங்க ஆரி
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது, ஆரியை வாழ்த்திய அனிதா சம்பத் கப்போட வாங்க ஆரி என அட்டகாசமாக வாழ்த்தி சென்றார். மேலும், ரம்யாவுக்கும் தனது ஆதரவை அவர் தெரிவித்தார். ஆரியை பார்க்கவே பிக் பாஸ் வீட்டுக்கு வந்தேன் என சனம் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மண்டியிட்டு முத்தம்
எல்லோருமே வெளியே போன பிறகும் பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு ரசிகர்களுக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நன்றி சொன்ன சனம் ஷெட்டி, கடைசியாக மண்டியிட்டு பிக் பாஸ் வீட்டை முத்தமிட்டார். இது என் வீடு, இது எனக்கு கோவில் மாதிரி என சனம் ஷெட்டி கண்ணீர் விட்டு அழுது, கடைசியாக விடைபெற்று சென்றார்.