twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வதந்தியை நம்பாதீங்க... கொரோனா தடுப்பூசி போட்டுக்கங்க... வரலஷ்மி வெளியிட்ட வீடியோ

    |

    சென்னை : கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள நடிகை வரலஷ்மி சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

    Recommended Video

    Aishwarya Rajesh மக்களிடம் வேண்டுகோள் | நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    காஜல் அகர்வால் நடிக்கும் உமா... இதுவரை நடித்திராத கதாபாத்திரம் !காஜல் அகர்வால் நடிக்கும் உமா... இதுவரை நடித்திராத கதாபாத்திரம் !

    மேலும் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    போல்டான கருத்துக்கள்

    போல்டான கருத்துக்கள்

    நடிகை வரலஷ்மி சரத்குமார் போல்டான கேரக்டர்களுக்கு பெயர் போனவர். இதேபோல தனிப்பட்ட முறையில் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். ட்விட்டர் பக்கத்திலும் பல்வேறு போல்டான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். பல்வேறு வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

    கொரோனா ஹெல்ப்லைன்

    கொரோனா ஹெல்ப்லைன்

    கொரோனா விழிப்புணர்வுக்காகவும் இவர் குரல் கொடுத்து வருகிறார். கொரோனா நோயாளிகளுக்கு உதவ ஹெல்ப்லைனையும் ஆரம்பித்துள்ளார். சேவ் சக்தி பவுண்டேஷன் என்ற பெயரில் விலங்குகள் மற்றும் பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

    வதந்திகளை நம்பாதீங்க

    வதந்திகளை நம்பாதீங்க

    இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து நிலவிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் இரண்டு வரலஷ்மியாக பிரிந்து வதந்தியை நம்பும் வரலஷ்மிக்கு மற்றொரு வரலஷ்மி தெளிவை ஏற்படுத்துவதாக செய்துள்ளார்.

    தடுப்பூசி போட வலியுறுத்தல்

    இந்த வீடியோ சிறப்பான வகையில் அமைந்துள்ளது. மேலும் தான் கோவிட் -19 தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளதாகவும் மற்றவர்களும் போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். தடுப்பூசியை போட்டுக் கொண்டு கொரோனாவை வெல்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

    Read more about: video வீடியோ
    English summary
    Take the vaccine Beat corona -Varalaxmi Sarathkumar says
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X