டியர் பாலு சார்.. விரைவில் குணமடைய வேண்டும்.. வீடியோ வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!
சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் நலம் பெற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஐசியுவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகனான எஸ்பிபி சரண் வீடியோ வெளியிட்டு தெரிவித்து வருகிறார்.

ரஜினிகாந்த் உருக்கம்
எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

டியர் பாலு சார்
அதில் விரைவில் குணமடையுங்கள் டியர் பாலு சார் என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், அவர் பேசியிருப்பதாவது, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் பாடி கோடி கோடி மக்களை மகிழ்வித்த மதிப்புக்குரிய எஸ்பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்பதை கேள்வி பட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இறைவனை பிரார்த்திக்கிறேன்
இன்னும் தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்பிபி அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்றேன்.. நன்றி.. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த வீடியோ வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றுள்ளது.

சும்மா கிழி
பலரும் ரஜினிகாந்தின் இந்த வீடியோவை ரீடிவிட் செய்து வருகின்றனர். ரஜினிகாந்தின் பாஷா, முத்து, சிவாஜி உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் அவருக்கு அறிமுகம் கொடுக்கும் பாடல்களை எஸ்பி பாலசுப்ரமணியம்தான் பாடியுள்ளார். கடைசியாக வெளியான ரஜினியின் தர்பார் படத்திலும் கூட நான் தாண்டா இனிமேலு.. வந்து நின்னா தர்பாரு.. என்ற பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











