"கெத்து" கன்னடச் சொல்லாம்.. ஒரே போடாக போட்டது தமிழக அரசு!

By Manjula

சென்னை: கெத்து படத்திற்கு வரிவிலக்கு வேண்டும் என்று நடிகர் உதயநிதி தொடர்ந்த வழக்கில் கெத்து தமிழ்ச்சொல் அல்ல அது கன்னட சொல் என்று தமிழக அரசு பதிலளித்துள்ளது.

தணிக்கைக் குழுவில் யூ சான்றிதழ் பெற்றாலும் கெத்து சுத்தமான தமிழ்ப்பெயர் கிடையாது என்று வரிவிலக்குக் குழுவினர் வரிவிலக்கு அளிக்க மறுத்தனர்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார்.இந்நிலையில் கெத்து கன்னட சொல் என்று தமிழக அரசு தரப்பில் பதிலளித்துள்ளனர்.

கெத்து

கெத்து

உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், சத்யராஜ் மற்றும் விக்ராந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் கெத்து. முதன்முறையாக காமெடியைத் தவிர்த்து ஆக்ஷன் ஹீரோவாக உதயநிதி நடித்திருக்கிறார். தணிக்கைக் குழுவில் யூ சான்றிதழ் பெற்ற இப்படத்திற்கு கெத்து சுத்தமான தமிழ்ப்பெயர் கிடையாது என்று வரிவிலக்குக் குழுவினர் வரிவிலக்கு அளிக்க மறுத்தனர்.

வழக்கு

வழக்கு

இதனை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடர்ந்தார். முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் கெத்து என்பது தமிழ் சொல்தான். திருப்புகழில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது' என்று பாட்டுப் பாடி மேற்கோள் காட்டினார்.

தமிழ்ச் சொல் அல்ல

தமிழ்ச் சொல் அல்ல

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வணிகவரித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் "கெத்து திரைப்படத்தை 3 அதிகாரிகளும், திரைப்படத்துறையில் நீண்ட காலமாக அனுபவம் பெற்ற 4 பேரும் பார்த்தனர். அவர்கள் கெத்து என்ற சொல் தமிழ் சொல் அல்ல என்று கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், மனுதாரரின் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தமிழ் அகராதி

தமிழ் அகராதி

சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில், ‘கெத்து' என்ற வார்த்தையே இடம் பெறவில்லை. மேலும், கெத்து என்ற வார்த்தை குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் அளித்த விளக்கத்தில், ‘கெத்து' என்பது தமிழ் சொல் அல்ல என்று கூறியுள்ளார்.

பிறமொழிச் சொற்கள்

பிறமொழிச் சொற்கள்

காப்பி, மேஜை, டீ உள்ளிட்ட பிறமொழி வார்த்தைகள் தமிழிலும் பயன்படுத்தப்படுகின்றன. அதற்காக அவை தமிழ் வார்த்தைகள் ஆகாது. மேலும், நாஸ்தா, பந்தா, கெட்டப்பு, கப்பு, அப்பீட்டு போன்ற வார்த்தைகளையும் தமிழர்கள் பயன்படுத்துகின்றனர்.

கன்னட மொழி

கன்னட மொழி

அதுபோலத்தான், கெத்து என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கெத்து என்பது கன்னட மொழிச் சொல்லாகும். இதற்கு கன்னட மொழியில், மாறுபட்ட நிழல்படம், சமம் என்று அர்த்தம் கூறப்படுகிறது.

திருப்புகழில் 33 சொற்கள்

திருப்புகழில் 33 சொற்கள்

திருப்புகழில் கெத்து என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறுகிறார். ஆனால், திருப்புகழில் 33 பிறமொழி சொற்கள் இடம்பெற்றுள்ளன. அனுபவம், கிருபை, சைலம் என்று பிற மொழி வார்த்தைகள் வருகின்றன. உருது வார்த்தையான ‘சலாம்' என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது.

ரஜினிமுருகன், திருட்டு விசிடி

ரஜினிமுருகன், திருட்டு விசிடி

ரஜினி முருகன் என்ற படத்துக்கு வரிச்சலுகை வழங்கினாலும், அந்த தலைப்பு அந்த படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர். திருட்டு வி.சி.டி. என்ற படத்துக்கும் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. வி.சி.டி. என்பது வினோத், சின்னா, டெல்லி என்ற நபர்களின் பெயர்களின் சுருக்கமாகும். எனவே, கெத்து படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை வழங்காமல் நிராகரித்தது சரியானது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்" மேற்கண்ட விளக்கத்தை தமிழக அரசு சார்பில் அளித்திருக்கின்றனர்.

கெத்து தமிழ் சொல்தான்

கெத்து தமிழ் சொல்தான்

உதயநிதி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘4 வகையான தமிழ் அகராதிகளை கோர்ட்டில் தாக்கல் செய்து, கெத்து என்பது தமிழ் சொல்தான் என்று வாதம் செய்தார்.

தள்ளிவைப்பு

தள்ளிவைப்பு

இந்த வழக்கில் அரசு தலைமை வழக்குரைஞர் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்கவேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி துரைசாமி, விசாரணையை செவ்வாய்க்கிழமை(இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இன்று பிற்பகலுக்கு மேல் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று

இதே போன்று

ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியான 7ம் அறிவு திரைப்படத்திற்கு இதேபோல தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்து, தற்போது அந்த மனு நீதிமன்ற விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X