twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் புதிய தமிழ்ப் படங்கள்!

    By Shankar
    |

    புதிய தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதால், வெளியீட்டிலிருந்து விலகிக் கொண்டுள்ளன இரு படங்கள்.

    சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் ஓரளவு போதுமான தியேட்டர்கள் இருந்தாலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் படிப்படியாக தியேட்டர்கள் மூடப்பட்டு வருகின்றன.

    1150 அரங்குகள்

    1150 அரங்குகள்

    இன்றைய தேதிக்கு தமிழகத்தில் மொத்தமே 1150 அரங்குகள்தான் உள்ளன. பெரிய படங்கள் வந்தால் இவற்றில் பாதி அரங்குகள் போய்விடுகின்றன. ஏற்கெனவே வெளியான படங்கள் மற்ற அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், 50 அல்லது 100 தியேட்டர்களிலாவது வெளியானால் போதும் என காத்திருக்கும் சுமார் பட்ஜெட் படங்களுக்கு சுத்தமாக தியேட்டரே கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

    டப்பிங் படங்கள்

    டப்பிங் படங்கள்

    இன்னொரு பக்கம் டப்பிங் படங்களின் ஆதிக்கம். பல மல்டிப்ளெக்ஸ்களில் டப்பிங் படங்களே ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக தமிழ் பேசும் ஹாலிவுட் படங்கள்.

    நான்கு படங்கள்

    நான்கு படங்கள்

    இந்த வாரம் நான்கு படங்கள் வெளியாகவிருந்தன. அவை பட்டத்து யானை, பொன்மாலைப் பொழுது, சொன்னா புரியாது, தங்க மீன்கள் ஆகிய நான்கு படங்களையும் குறைந்தது தலா 100 தியேட்டர்களிலாவது வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால் தியேட்டர்கள் கிடைக்காததால் இவற்றிலிருந்து பொன்மாலைப் பொழுதும் தங்க மீன்களும் விலகிக் கொண்டன.

    பட்டத்து யானை

    பட்டத்து யானை

    விஷாலின் பட்டத்து யானைக்கு குறைந்தது 250 தியேட்டர்கள் வேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிங்கம் 2 இன்னும் ஓடிக் கொண்டிருப்பதால் அது மிக சிரமம் என்று கைவிரித்துவிட்டனர் தியேட்டர்காரர்கள். இப்போது 100 அல்லது 150 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகக் கூடும்.

    சொன்னா புரியாது

    சொன்னா புரியாது

    மிர்ச்சி சிவா நடித்துள்ள சொன்னா புரியாது படத்துக்கு 200 தியேட்டர்களை ஒப்பந்தம் செய்ய முயன்று வருகிறார்கள். இந்த இரண்டு படங்களுமே பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ள படம் என்பதால் ஓரளவு தியேட்டர்களாவது கிடைக்கின்றன.

    தங்க மீன்கள்

    தங்க மீன்கள்

    பலரும் நல்ல படம் என்று பாராட்டியும் கூட ராம் இயக்கியுள்ள தங்கமீன்களுக்கு நல்ல தியேட்டர்கள் கிடைத்தபாடில்லை. தமிழ்ப் படங்களுக்கு தமிழ்நாட்டிலேயே தியேட்டர் கிடைக்கலேன்னா எப்படி? என்று புலம்பும் தயாரிப்பாளர்கள், சிறு நகரப் பகுதிகளில் கூடுதல் தியேட்டர்கள் கட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    Read more about: tamil films theaters
    English summary
    It is becoming increasingly difficult in getting screens for Tamil films in Tamil Nadu on July 26 due to shortage of theaters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X