தலைவன் நல்லபடியாக சீக்கிரம் குணமாகனும் ஆண்டவா.. மீம் போட்டு வேண்டிக் கொள்ளும் வடிவேலு ரசிகர்கள்!

சென்னை: வைகைப் புயல் வடிவேலு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிந்த வடிவேலு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்காக மீம் போட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மீம் க்ரியேட்டர்களின் தலைவனான வடிவேலு சீக்கிரமே குணமாகி வீடு திரும்புவார் என ரசிகர்கள் #GetWellSoonVadivelu என்ற ஹாஷ்டேக்கை வேண்டி வருகின்றனர்.

வடிவேலுக்கு கொரோனா

வடிவேலுக்கு கொரோனா

நடிகர் வடிவேலுவின் தடை நீங்கிய நிலையில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு. அந்த படத்திற்காக இயக்குநர் சுராஜ், வடிவேலு மற்றும் படக்குழுவினர் லண்டன் சென்று திரும்பிய நிலையில் நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

காமெடி கிங் வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு என்று தெரிந்ததும் அவரது ரசிகர்கள் #GetWellSoonVadivelu என்ற ஹாஷ்டேக்கை போட்டு சமூக வலைதளங்களில் வடிவேலு சீக்கிரம் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் பிரார்த்தனை

விஜய் ரசிகர்கள் பிரார்த்தனை

கொரோனா பாசிட்டிவ் காரணமாக நடிகர் வடிவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என தளபதி விஜய் சார்பாக அவரது ரசிகர்கள் ஏகப்பட்ட ட்விட்களை போட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தலைவன் குணமாகணும் ஆண்டவா

தலைவன் குணமாகணும் ஆண்டவா

தலைவன் நல்லபடியா சீக்கிரம் குணமாகணும் ஆண்டவா என சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியில் வைகைப்புயல் வேண்டுவது போன்ற மீம்களை போட்டே வடிவேலு ரசிகர்கள் பிரார்த்தனை செய்வது அவர் மீதுள்ள அதீத பாசத்தையே வெளிக்காட்டுகிறது.

கொரோனாவுக்கே சவால்

கொரோனாவுக்கே சவால்

"ஹே கொரோனா ஏன் கூட மோதி பக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டயா.. பீ கேர் ஃபுல். மீண்டு வாருங்கள் வைகை புயலே" என வடிவேலு பட மீம்களை போட்டு ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். வடிவேலு விரைவிலேயே பூரண நலமாகி மக்களை மகிழ்விக்க வருவார் என ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.

கமலுக்கும் இதே போல்

கமலுக்கும் இதே போல்

சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், உலகநாயகன் கமலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், லண்டன் சென்று திரும்பிய நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கும் கொரோனா பாதித்துள்ளது. வெளிநாடுகளுக்கு நடிகர்கள் செல்வதை இதன் காரணமாக தவிர்ப்பார்களா? இல்லை கூடுதல் பாதுகாப்புடன் செல்ல வேண்டியது அவசியமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X