Ghaati X Review: அனுஷ்காவின் ‘காட்டி’ படம் அட்டகாசமா? படுமோசமா?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
ஹைதராபாத்: கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு, ஜகபதி பாபு, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள காட்டி படமும் வெளிநாடுகள் மற்றும் ஆந்திராவில் அதிகாலையிலேயே திரையிடப்பட்டுவிட்டது.
அருந்ததி, பாகமதி, ருத்ரமாதேவி, பாகுபலி 1 மற்றும் 2 படங்களில் அனுஷ்காவின் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக இருந்த நிலையில், இந்த படத்தில் பஸ்ஸில் ஏறி ஜான் விஜய் கழுத்தை அறுக்கும் காட்சிகளும் கஞ்சா விளைவிக்கும் காட்டிக்களின் கூட்டம் குறித்து புஷ்பா பட பாணியில் கிருஷ் உருவாக்கியுள்ள உலகம் எப்படி இருக்கிறது என காண ரசிகர்கள் ஆவலுடன் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

படத்தின் டீசர் மற்றும் டிரைலர்களில் எல்லாம் ஆக்ரோஷமான அனுஷ்கா கையில் ஆயுதத்துடனும் வாயில் புகையை இழுத்தும் நடித்துள்ள காட்சிகள் மிரட்டிய நிலையில், படத்தின் FDFS பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காட்டி படத்துக்கு என்ன ரேட்டிங் கொடுத்துள்ளனர் என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
அனுஷ்கா ஷெட்டி சூப்பர்: இங்கிலாந்தில் காட்டி படத்தின் ப்ரீமியர் காட்சியை பார்த்துவிட்டு வந்த பெண் ரசிகைகள் காட்டி படம் குறித்து கொடுத்த பப்ளிக் ரிவ்யூவில் அனுஷ்கா ஷெட்டி சூப்பர் என்றும் கம்பேக் என்றும் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. காட்டேரம்மாவாக அனுஷ்கா மாறி எடுத்துள்ள அவதாரம் தியேட்டர் தெறிக்கும் மொமண்ட் என்கின்றனர்.
வெங்கி விமர்சனம்: சினிமா விமர்சகர் வெங்கி அனுஷ்காவின் காட்டி படத்தை பார்த்துவிட்டு வெறும் 2.25 ரேட்டிங் தான் கொடுத்துள்ளார். தசரா, புஷ்பா போன்று இந்த படத்தையும் வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்குநர் கிரிஷ் எடுக்க முயற்சி செய்திருப்பது நல்ல விஷயம் தான். ஆனால், முதல் பாதி படம் முழுவதும் ரொம்பவே மொக்கையாக உள்ளது என்றும் 2ம் பாதியில் அனுஷ்கா மட்டுமே படத்தை காப்பாற்ற போராடுகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
சலார் பிரபாஸ் போலவே: பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்த பிரபாஸ் எப்படி காளி அவதாரம் எடுப்பது போல பின்னாடி அத்தனை கைகள் ஆயுதத்துடன் வரும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதோ அதே போல அனுஷ்காவுக்கும் காட்டி படத்தில் அப்படியொரு சீனை ஸ்டண்ட் மாஸ்டர் வைத்துள்ளார். இதுதான் Couple Goals என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஒன் உமன் ஷோ: பொதுவாகவே பெரிய படங்களை ஹீரோ மட்டுமே தாங்கிப் பிடிக்கும் பல படங்கள் ஒன் மேன் ஷோ என கொண்டாடப்படும். காட்டி படத்தில் 2ம் பாதியில் தான் ஷீலாவதியாக இருக்கும் அனுஷ்கா கட்டேரம்மாவாக அசுர தாண்டவம் ஆடுகிறார். அனுஷ்கா மட்டுமே படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்வதால் ஒன் உமன் ஷோ என ரசிகர்கள் அனுஷ்காவை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











