இவர்கிட்டதான் கத்துக்கனும்… படத்தை எப்படி புரோமோட் பண்ணனும்னு!

ஆன்லைன் கான்டஸ்ட் மூலம் கஜினிகாந்த் திரைப்படத்தை சென்னை ரசிகர்களுக்கு முன்கூட்டியே திரையிட திட்டம்.

Recommended Video

பட ரிலீசிற்கு முன்பே படத்தை ரசிகர்களுக்கு திரையிடும் கஜினிகாந்த் படக்குழு- வீடியோ

சென்னை: ரிலீசுக்கு முன்பாகவே கஜினிகாந்த் திரைப்படத்தை சென்னை ரசிகர்களுக்கு திரையிட ஸ்டூடியோ க்ரீன் முடிவு செய்துள்ளது.

ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தாயாரிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி ஆர்யா நடித்திருக்கும் திரைப்படம் கஜினிகாந்த். ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Ghajinikanth movie contest!

இந்த நிலையில் ரிலீஸ் தேதிக்கு முன்பாக படத்தை பார்க்கும் வாய்ப்பை சென்னை ரசிகர்களுக்கு வழங்க ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ட்விட்டரில் கேட்கப்படும் எளிதான கேள்விக்கு பதிலளிக்கும் சென்னை ரசிகர்கள் படத்தை ரிலீசுக்கு முன்பே பார்க்க முடியும்.

கஸ்டமர் ஈஸ் த கிங் என்று இந்த போட்டிக்கு பெயர் வைத்துள்ளனர். சினிமா தொடர்பாக கேட்கப்படும் மூன்று கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்லும் சென்னை ரசிகர்களுக்கு படம் பிரத்தியேகமாக திரையிடப்படும்.

ஞாபக மறதிக்கு பெயர்போன படங்களான சூர்யா நடித்த கஜினி மற்றும் ரஜினிகாந்த் நடித்த தர்மத்தின் தலைவன் திரைப்படங்களைக் கொண்டு இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர். இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தர்மத்தின் தலைவன் திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக வரும் ரஜினிகாந்த் ஞாபக மறதியில் செய்யும் சேட்டைகள் நகைச்சுவையாக இருக்கும்.

அதனால் ரஜினிகாந்த் பெயரில் ரஜினியை நீக்கிவிட்டு அதில் கஜினியைச் சேர்த்து கஜினிகாந்த் என பெயரிட்டுள்ளனர்.

மாருதி தேசாய் இயக்கத்தில் நானி லாவன்யா திருப்பாதி நடித்து 2015 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பலே பலே மகாதிவோய் திரைப்படத்தின் ரிமேக் படம் தான் கஜினிகாந்த்.

இப்படத்தில் ஆர்யா, சாயிஷா, முகுல் தேவ், சதிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார், பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்துள்ளார்.

More from Filmibeat

Read more about: ghajinikanth arya movie contest
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X